பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*TË5:fuiso obstimurë, assosú Innsbn@ 287 இயக்குநரை நியமிக்க வேண்டும் என்பது பரிந்துரைகளில் ஒன்று என்பதாக நினைவு. மாநாட்டு ஏற்பாடுகளில் - நடைமுறைகளில் - எவ்விதக் குறைபாடும் புகவில்லை. உணவு ஏற்பாடுகளும் எல்லார்க்கும் நிறைவாகவே இருந்தன. அந்த ஏற்பாட்டினைத் தக்கபடி செய்து தந்தவர் எவர்? சென்னை நகரத் தொகுதிகளுள் ஒன்றின் சட்டமன்ற உறுப்பினராக விளங்கிய, "நெல்சன் கம்பெனி, ஏ. எம். சம்பந்தம். அவர் ஆளுங்கட்சிக்காரர். உணவு ஏற்பாட்டிற்கென வரவுசெலவுக் கணக்கை, அவர் நேரே, அரசுக்கு ஒப்படைத்துவிட்டார். என் கண்காணிப்பில் ஆன செலவு மதிப்பீட்டில் பாதி GTঢ়তা GDITLD, 'நல்ல காரியத்திற்கு வேலை செய்கிறோம். மற்றவர்கள் கொடுக்கிற கூலி வேண்டாம்” என்று பணியாளர்கள், பெரும்பாலோர், தாங்களாகவே குறைத்து வாங்கிக்கொண்டார்கள். கல்வித்துறை ஊழியர்கள், இதற்கு அதற்கு என்று கண்டபடி வீண்செலவு செய்யவில்லை. பெரியார் சீடர்கள்போல், முடிந்த போதெல்லாம், மிதிவண்டியை வாங்கிக்கொண்டு சுற்றினார்கள். அரசின் பணத்தைச் சோடா குடிக்கவும் பயன்படுத்தவில்லை. ஆதாரக் கல்வி அலுவலர், திரு. சு. இராஜம் தலைமையில் இயங்கிய கல்வித்துறை அணி, தியாக அணியாகச் செயல்பட்டது. அவர்களில் நெல்லை ஆ. கணபதி என்பவர் இன்றும் சென்னையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இருக்கிறார். வினோபாவிடம் இருட்டடிப்பு மாநாடு வெற்றிகரமாக முடிந்தது. மறுநாள், அதிகாலை, வினோபா தமது நடைப் பயணத்தைத் தொடங்கினார். அவர் வந்ததும், புறப்படுவதும் அவரது தொண்டர்களின் ஏற்பாடு. மாநாட்டின் இறுதி நாள் இரவு, வினோபா "இம் மாநாட்டுத் தொண்டர்களையும் பிற ஏற்பாடுகளைச் செய்தவர்களையும், நான் சில மணித்துளிகள் காணவேண்டும்; அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/326&oldid=788117" இலிருந்து மீள்விக்கப்பட்டது