உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 நினைவு அலைகள் போட்டு இருப்பது, தட்டப் பந்தல், கோடை வெயிலில் தரை காய்ந்துவிடும். மேடைப் பகுதி மட்டும் கொட்டகை, அதையும் சாக்குப் பையால் ஒற்றி நீரை எடுத்துவிட்டால், மேடையும் காய்ந்துவிடும். பந்தலில் விரிப்பதற்காகச் சுருட்டிவைக்கப்பட்டிருநத மூங்கிற்பாய் சுருள்களை அவிழ்த்து, வெளியே வெயிலில் பரப்பிவிட்டால் உலர்ந்துவிடும். பின்னர், நாற்புறமும் சுருட்டி வைத்து விட்டுப் போவோம். விடிவதற்கு முன்பே விளக்கொளியில் பத்து பதினைந்து ஆட்களைக்கொண்டு, அவற்றைப் பரப்பி விடுவோம் என்று முடிவு செய்தோம். அன்றிரவும் மழை பெய்யாவிட்டால், சமாளித்து விடலாமென்ற நம்பிக்கையோடு செயல்பட்டோம். வேலையாள்கள், சுருள்களைப் பிரித்துப் போட்டார்கள். மாநாட்டுப் பணிக்காக வந்திருந்த கல்வித் துறைப் பணியாளர்கள். உடன் உதவி செய்தார்கள். வள்ளுவனின் ஆர்வம் எவர் தடுத்தும் நிற்காமல், வள்ளுவனும் முழுமூச்சோடு ஈடுபட்டான். ‘உழைப்பின் உயர்வை நம்புகிற நான், அலுத்துப் போகிற போது, சிறிது நேரம், காரில் உட்கார்ந்து ஒய்வு எடுத்துக்கொள்' என்று சொல்வதோடு நின்று விட்டேன். மணிக்கணக்காக, சோர்வு கொள்ளாது, திருவள்ளுவன் வேலை செய்ததைக் கண்டு திகைத்தேன். அன்று பகல் முழுவதும் கடுமையான வெயில் அடித்தது. தரை உலர்ந்ததோடு, மூங்கில் பாய்களும் காய்ந்துவிட்டன. “இரவு மழை இல்லாதிருக்க வேண்டிக் கொள்ளுங்கள் அப்பா” என்று சொல்லியபடியே மாலைப்பொழுது என்னோடு பயணிகள் விடுதிக்குத் திரும்பினான். அவன் வேண்டுதல் பலித்தது. இரவு சொட்டு மழை இல்லை. எனவே, அடுத்த இரு நாள்களும் மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. வழக்கம்போல், முன்னர் எடுத்த முடிவுகளையே எடுத்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதாரக் கல்விக்கு என்று தனியாக ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/325&oldid=788116" இலிருந்து மீள்விக்கப்பட்டது