உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*tribđluolo -9b#frưở, chả0súl tai"IETC) 2B5 “சரி அப்பா மாநாட்டுக் கொட்டகை என்னவாகும்? தரையெல்லாம் ஈரமாகி விட்டால், ஒரு பகலில் உலர்ந்து விடுமா?” - இது திருவள்ளுவனின் கவலை. 'உலர்ந்துவிடும்” என்று சொல்லி அவனைத் தேற்றினேன். கொட்டும் மழை நெடுநேரம் பொழிந்தது. அது ஒய்வதற்குள், மூன்று முறை அருமை மகன் நச்சரித்தான். 'தரையும் பாய்களும் உலர்ந்து விடுமா?’ என்பதை அவனுடைய கவலை. பtண்டும் துாக்கம் வரவில்லை. பொழுது விடியக் காத்திருந்தோம். விடியாமலா போகும்? விடிந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டோம். அதிகாலையிலேயே மாநாட்டுப் பந்தலுக்குச் சென்றேன். திருவள்ளதவனும் கார் எாலி என் ைன் வந்தான். தங்கவ்ேலரின் பண்பு பந்தலை அடையும் வேளை ஏ. கே. தங்கவேலரும் வந்து சேர்ந்தார். அவர் என்னிலும் மூத்தவர். ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர். ஆதாரக் கல்விக்கு உடன்பாடு உடையவர் என்று சொல்லவும் இயலாது. எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியாக எல்லா நேரமும் இயங்கக் கூடாது. இப்படி இயங்கவும் தேவையில்லை. 'கருத்து வேறுபாடுகளை உரிய நேரத்தில், வெட்டொன்று துண்டு இரண்டு என்று சொல்லக் கூசக்கூடாது. மற்ற நேரங்களில் ஒத்துழைக்க வேண்டும்’ என்னும் பண்பாட்டில் வளர்ந்தவர். தான் வாழும் பெருநகருக்கு, இந்தியக் குடியரசுத் தலைவரும் புனிதர் வினோபாவும் வரும்போது உரிய மரியாதை காட்டத் தம் பங்கை ஆற்ற வேண்டும். இத்தகைய உணர்வுகளால் உந்தப்பட்டு, மாநாட்டுச் செயலர்களில் ஒருவராகச் செயல்பட இசைந்தார். அவரும் நனைந்த கொட்டகைக்கு மாற்று என்ன செய்யலாமென்று பார்க்க அதிகாலையிலேயே வந்துவிட்டார். தங்கவேலரின் பொறுப்புணர்ச்சியை என்ன சொல்லிப் பாராட்டுவேன். அவரோடு கலந்து ஆலோசித்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/324&oldid=788115" இலிருந்து மீள்விக்கப்பட்டது