உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நினைவு அலைகள் "உட்பொருள் அதுவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினால், சொல்லும் பாணியில் சற்று தேன்பூச்சு இருக்கும்படி மாற்றி வாருங்கள். “இதனால், நீங்கள் அமைச்சரின் வெறுப்புக்கு ஆளாகலாம். எப்படி இருப்பினும் துணிந்து செய்வதே நல்லது” என்றார். அத்தகைய நிலையில், எந்த அமைச்சருக்குமே அப்படிப்பட்ட ஆலோசனை கூறியிருப்பேன். மாண்புமிகு சி. சுப்பிரமணியத்துக்குச் சொல்வது என் கடமை. அமைச்சரின் பெருந்தன்மை எனவே, வந்தது வரட்டுமென்று உதகை சென்றேன். அமைச்சரைக் கண்டேன். வந்த காரணத்தை விளக்கினேன். பொறுமையாகக் கேட்டார். இருமுறை படித்துப் பார்த்தார். குத்தும் முனைகளின் கூர்மைகளைத் தட்டி விட்டார். அமைச்சர் சி. சுப்பிரமணியத்தின் பெருந்தன்மை இருந்தவாறு என்னே! திருந்திய உரையோடு, காஞ்சிக்குத் திரும்பினேன். காஞ்சியில் பெருமழை அனைத்திந்திய ஆதாரக் கல்வி மாநாட்டில் முன்னேற் பாடுகளை எல்லாம் நாற்பது மணிகள் முன்னதாகவே செய்து விட்டோம். அதனால் ஏற்பட்ட மனநிறைவோடு இரவு ஒன்பது மணிக்கே உறங்கி விட்டோம். சிறிது நேரத்தில் அமைதிக்குக் கேடு வந்தது. இரவு பத்து மணி இருக்கும். பேரிடி இடித்தது. அந்த இரைச்சலில் கா.சு. திருவள்ளுவன், காந்தம்மா, நான் ஆகிய மூவருமே விழித்துக் கொண்டோம். "அம்மா அப்பா இதென்ன இடி!” என்று திருவள்ளுவன் கேட்டான். 'கடும் மழை கொட்டிற்று. கொட்டியபடியே இருந்தது மின்னல் வானைப் பிளந்துகொண்டே இருந்தது; இடி முழங்கிய படியே இருந்தது. ‘வெயிற் காலத்தில், இப்படி மழையும் இடியும் வருவதுண்டு அரை, ஒரு மணிக்குள் ஒய்ந்துவிடும்” என்று அவனை அமைதிப்படுத்தினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/323&oldid=788114" இலிருந்து மீள்விக்கப்பட்டது