பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"nébáullsi ehönwë கல்வி மாநாடு 283 அத்தகைய கேள்விகளே, வருங்காலத்திலும் அறிவு தேடும் உந்து சக்திகளாகப் பயன்படும். இது சுந்தரவடிவேலு என்னும் மனிதனின் நம்பிக்கை எனவே, கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பி இருந்தால் பூரித்திருப்பேன்; சிந்தித்து இருப்பேன். மாநாட்டை அமைத்து இருப்பதோ சென்னை மாகாண ஆட்சி. அந்த ஆட்சியின் முக்கிய உறுப்பினரான, வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியான, சி. சுப்பிரமணியம் அப்படிச் சொல்வது, பொருத்தமா?” என்று கேட்டபோது எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. “இதனால், பதவி போனாலும், கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை; துணிந்து சொல்லுங்கள்’ என்று சகுனி வேலை செய்ய மனம் இடம் தரவில்லை. மணப்பந்தலில் அமர்ந்து, திருமணச் சடங்கு நடத்தும் சாத்திரியார், குடும்பம் ஒர் தொல்லை என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி அந்த வரவேற்புரை இருப்பதாகத் தோன்றிற்று. திரு. கே. அருணாசலத்திற்கு இருவகை வேதனை ஆதாரக் கல்வியைக் குறை கூறுவது பற்றி வேதனை! அக் குறையைச் சொல்லுவதின் பலனாக, தனக்கு வேண்டிய திறமையான நேர்மையான - ஒருவருக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாதே என்பது மற்றோர் வேதனை. அவற்றை ஒளிக்காமல் என்னிடம் கூறினார். திரு. சி. சுப்பிரமணியம் அனுப்பிய உரையை அப்படியே அச்சடித்து வைக்க இருவர் மனமும் இசையவில்லை. கலந்து ஆலோசித்த பிறகு, "நீங்கள் அமைச்சரின் தலைமை அலுவலர். எனவே, அவருக்கு எவ்விதப் பழியும் வராதபடி தடுப்பதில் முதல் பொறுப்பு ங்களுடையது. “எனவே, அவ்வுரையை எடுத்துக்கொண்டு உதகமண்டலம் போய், திரு சி. சுப்பிரமணியத்தைப் பார்த்து விளக்குங்கள். நானும் கேட்டுக் கொண்டதாகச் சொல்லுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/322&oldid=788113" இலிருந்து மீள்விக்கப்பட்டது