உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நினைவு அலைகள் இருவரும் தனித்தனியே படித்துப் பார்த்தோம். இருவருக்கும் திகைப்பு. ஏன்? அனைத்து இந்திய ஆதாரக் கல்வி மாநாட்டை நடத்தும் அமைச்சர் அந்த முறையைத் தாக்குவதுபோல் இருந்தது. “காந்தி அடிகள் உருவாக்கிய ஆதாரக் கல்வியையா நாம் செயல்படுத்துகிறோம்? "அவர் ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லவா செயல்திட்டத்தைக் கல்வித் துறையில் சேர்த்தார். “நாமோ பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததும் ஐந்து வயதுச் சிறுவர் சிறுமியர் கைகளில் தக்ளியைக் கொடுக்கிறோம். “அந் நிலையில் அச் சிறுவனுக்குக் கல்வி எட்டிக்காயாக இருக்குமா? இராதா? “ஏதாவது சாக்கைச் சொல்லி, பள்ளியைவிட்டு விலகிப்போக மாட்டானா? "வறுமை காரணமாக விலகுவோனைவிட, பாடமுறைக் குமட்டலால் பாதியில் நின்று விடுவோர் அநேகராக இருப்பார்கள் இல்லையா? "செயல் வழிக் கல்வி என்ற உயிர்நாடியைக் கெடுக்காது, பயிற்சிக்கான வேலைகளை மேல் வகுப்புகளில் கொடுக்கவேண்டும். நவீன தொழில்களைக் கற்றுத் தந்தால் அல்லவா எதிர்காலத்தைச் சமாளிக்கும் திறமை பெறுவார்கள். "மேல் வகுப்பு மானாக்கர்கள் இயற்கையாகப் பொறுப் புணர்ச்சி பெற்றவர்கள். கைத்தொழில் கற்பதின் நன்மையை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள். “எனவே, ஈடுபட்டுக் கற்றுக் கொள்வார்கள். அதன் வழி தன்னம்பிக்கையைப் பெறுவார்கள். கூடித் தொழில் புரியும் ஆளுமை வளரும். ஆதாரக் கல்வியைத் திருத்தி அமைக்க வேண்டாமா? மேற்படி பாணியில் அமைந்தது அமைச்சரின் வரவேற்புரை. எதைப் பற்றியும் 'ஏன், எதற்காக, எப்படி, வேறு வகையில் இருந்தால் என்ன?’ என்பது போன்ற கேள்விகளை எழுப்பியவர்கள் இருந்ததால்தான், உலகம் மாறி வந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/321&oldid=788112" இலிருந்து மீள்விக்கப்பட்டது