பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சியில் ஆதாரக் கல்வி மாநாடு 281 அப்பாவுக்குச் சம்பளம் வருகிறது. பணம் வேண்டுமென்று தாத்தாவைக் கேட்க வேண்டாம். அச்சிட்டுக் கொடுங்கள் அப்பா” என்றான் திருவள்ளுவன். அதை நிறைவேற்றி வைக்கும் நற்பேறு கிட்டியது. எனது முதல் நூல் அடித்தா? அனைத்தா?’ என்ற தலைப்பில் இலவசமாக வெளிவந்தது. மூன்று பதிப்புகளிலுமாக முப்பது ஆயிரம் படிகள் அச்சிட்டு இலவசமாக வழங்கினேன். முதற்பதிப்பு வழங்குவிழா சென்னை அண்ணாசாலையில் அப்போது முஸ்லீம் ஆண்கள் கல்லூரியாக இருந்த வளாகத்தில் நடைபெற்றது. திருவள்ளுவன், விழாவிற்கு வந்து, 'அடித்தா, அனைத்தா?” என்னும் தலைப்பைக்கொண்ட அச் சிறு நூலை வரிசை வரிசையாக வழங்கி மகிழ்ந்தான். 'அடித்தா, அனைத்தா?’ புரட்சிகரமான நூல் அல்ல. அடிப்படைக் கல்வி முறைகளை நினைவுபடுத்தும் நன்னூல். அவை, பெற்றோர்க்கும் பயன்படும் என்றாலும் ஆசிரியர்களை மினத்திலிறுத்திப் பேசப்பட்ட உரைகளாகும். எனவே, அந் நூலை, தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குக் காணிக்கையாக்கினேன். “அறியாமையைப் போக்கும் அரும்பணியில் என் பெரும்படையாய், தியாகப்படையாய், இப் படை தோற்கின் எப் படை வெல்லும் என்று கேட்கும் முறையில் உறுதியாய் நிற்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகளுக்கு, இந்தச் சுவடியை என் அன்பின் அறிகுறியாய், காணிக்கையாய் அளிக்கிறேன்.” கல்வித் துறையின் முதல் தொண்டனின் காணிக்கை. ஒவ்வோர் தொண்டரிடமும் பேரொளியைத் துாண்டிற்று என்பது மிகையல்ல. கல்வி அமைச்சரின் வரவேற்புரை - மாற்றம் செய்யப்பட்டது மாநாட்டிற்குச் சில நாள்கள் முன்னதாக, அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் தமது வரவேற்புரையை எழுதி அனுப்பி வைத்தார். ". - திரு. கே. அருணாசலம் நானும் படித்துப் பார்த்து, சரியெனப்பட்டால் அச்சடிக்க ஏற்பாடு செய்யும்படி கட்டளை இட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/320&oldid=788111" இலிருந்து மீள்விக்கப்பட்டது