பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2BO நினைவு அலைகள் “பாரியின் கொடைக்கு ஒப்பானதே. நிலக்கொடை வெற்றி பெற்று, வறுமையின் கொடுமை கட்டுக்குள் கொண்டுவர முடியுமானால் நன்றாக இருக்கும்” என்றேன் நான். அடுத்த நொடி, திருவள்ளுவன் குறுக்கிடடான். நீயும் நிலம் கொடு "அப்பா! அப்பா! ஊரில் உங்களுக்கு நிலம் இருக்கிறதாமே, அதில் ஒரு பங்கை வினோபா பாவாவிற்குக் கொடுத்தால் என்ன அப்பா?” என்று ஏழு வயதுச் சிறுவன் கேட்டான். பதில் கூறுவதில் என் மனைவி, காந்தம்மா முந்திக் கொண்டார். "அப்பாவுக்கு நிலம் இருந்தால், கொடுக்கலாம். ஊரிலிருக்கும் நிலமோ, தாத்தாவுடையது. “அவரோ, அப்பா பேரில் கோபமாக இருக்கிறார். அதனால் அப்பா சொல்வதை அவர் கேட்கமாட்டார். “தாத்தா, அப்பாவிற்கு ஏதாவது கொடுப்பாரா என்பதே சந்தேகம்.” இது தாயாரின் பதில். திருவள்ளுவன் அதோடு விடவில்லை. “கோபம் உள்ள இடத்தில்தான், நியாயம் இருக்கும். தாத்தா இப்போது கேட்பாரா என்பது தெரியாது. அப்பா பங்கில் சிறிதும் குறைக்காமல் சரியான பங்கைக் கொடுப்பாராம்மா?” என்றான். அது நூற்றுக்கு நூறு உண்மையாயிற்று. அதை உரிய இடத்தில் உரைப்பேன். “அப்பாவிடம் இப்போது நிலமிருந்தால் அதில் ஒரு பங்கைக் கொடுப்பார். தாத்தாவிடம் இருப்பதால், அதைப் பற்றிப் பேசிப் பயன் என்ன?’ என்றார் காந்தம்மா. திருவள்ளுவன் வழங்கினான் "அப்ப ஒரு யோசனை அம்மா! அப்பா ஊர் ஊராகப் போய்ப் பேசி, நன்றாகப் படிக்கத் துாண்டுகிறார். துரத்துக்குடியில் பேச்சு நன்றாக இருந்தது. அங்கே அம்மாவும் பேசினரீர்கள். “அந்தப் பேச்சுகளைச் சேர்த்து சிறு நூலாக அச்சிட்டு காசு இல்லாமல் எல்லோருக்கும் கொடுத்தால், அது அப்பா தானமாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/319&oldid=788109" இலிருந்து மீள்விக்கப்பட்டது