உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hírébfuili obstinjë ":"", "BIG 279 திருவள்ளுவனும் வந்தான் அனைத்திந்திய ஆதாரக் கல்வி மாநாட்டிற்காகத் தொடர்ந்து மூன்று நான்கு வாரங்கள் நான் காஞ்சிபுரத்தில் தங்க வேண்டி நேர்ந்தது. அது கோடை விடுமுறைக் காலமானதால், என் மகன் திருவள்ளுவன் என்னுடன் வர விரும்பினான். மாந்தர் பற்றியும் உலகத்தைப் பற்றியும் நிறையத் தெரிந்து கொண்டால்-இயற்கையாகக் கற்றுக்கொண்டால்-உரிய காலத்தில் என்னிலும் அதிகம் பயன்படுவான் என்பது என் அவா. எனவே, அவனையும் அழைத்துக்கொண்டு, காந்தம்மா என்னோடு காஞ்சிபுரம் வந்து தங்கினார். இப்போது அரசினர் மருத்துவமனையோடு இணைக்கப் பட்டுள்ள கட்டடம் 1956இல் பொதுப் பணித்துறைப் பயணிகள் விடுதியாக இருந்தது. அக் கட்டடத்தில் தங்கி இருந்தோம். ஒருநாள், முன்னிரவு வேளை, அவ் விடுதியின் வெளிப்புறத்தில் நாங்கள் மூவரும் உட்கார்ந்து ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தோம். பாரி வள்ளல் அவ்வேளை எங்களைப்பார்த்துவிட்டுப்போக வந்த ஆசிரியர் ஒருவர், "கேள்விப்பட்டீர்களா அய்யா! நம் களியாம்பூண்டி இராம கிருஷ்ண ரெட்டியாரும் அவரது வாழ்க்கைத் துணைவியாரும் தங்களுக்குச் சொந்தமான, "20 ஏக்கர் நிலமுடைய வயலூர் என்னும் சிற்றுாரை, பூமிதான இயக்கத்திற்குத் தந்துவிடப் போவதாக அறிவித்துவிட்டார்கள். “இந்தக் காலத்திலும் பாரி போன்ற வள்ளல்கள் இருக் கிறார்கள்” என்றார். “களியாம்பூண்டி என்னும் ஊர் எங்கள் செய்யாற்றின் தென்கரையில் நெய்யாடிவாக்கத்திற்கு மேற்கே உள்ள ஊர். உதவிப் பஞ்சாயத்து அலுவலராக அவ் வூருக்குச் சென்றிருக்கிறேன். திரு இராமகிருஷ்ண ரெட்டியாரைக் கண்டது உண்டு. அவர் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/318&oldid=788108" இலிருந்து மீள்விக்கப்பட்டது