உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நினைவு அலைகள் எனக்குக் கிடைத்த புதையல் “இந்த ஒதுக்கீடு துல்லியமானதல்ல. “எதற்கு எவ்வளவு கூடுதலாகத் தேவைப்பட்டாலும் நீங்களே, எங்கள் இசைவுக்காகக் காத்திராமல், அதிகச் செலவு செய்யுங்கள். "நீங்கள் அரசு பணத்தை வீணாக்க மாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார். முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் வைத்திருந்த உறுதியான நம்பிக்கை அல்லவா எனக்குப் புதையல்? மாநாடு நடந்து முடியும் வரை எனக்கு உதவியாக, எவரை வேண்டுமானாலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ள எனக்கு உரிமை கொடுக்கப்பட்டது. மண்டலப் பள்ளி ஆய்வாளர் திரு. எஸ். இராஜம் மற்றும் சிலரை அப் பணிக்கு அமைத்துக் கொண்டேன். அம் மாநாட்டிற்காக, காலதாமதம் இன்றி, காஞ்சிபுரம் சென்றேன். அண்ணாவின் ஆதரவு திரு. ஏ. கே. தங்கவேலரின் உதவியைப் பெற்றேன் என்னிடம் இசைவு தெரிவிக்கும் முன்னர், அவர் அறிஞர் அண்ணாவைக் கலந்து பேசினார். அடுத்த நாள் - ‘அண்ணா, சரியென்று சொல்லிவிட்டார். நெ. து. சு. ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், அது முடியும்வரை வேறொன் றையும் நினைக்கமாட்டார். == “அது மட்டுமல்ல, செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலையையும், பற்பல படிகளாகப் பிரித்துக் குறித்துக் கொள்வார். “எது முன்னே, எது பின்னே என்று முறைப்படுத்திப் பணியாற்றுவதில் மிகவும் கெட்டிக்காரர். “எனவே, அவரோடு சேர்ந்து, இவ்வளவு பெரிய வேலையைச் செய்வதால், உங்களுக்குக் கெட்ட பெயர் வராது. “கட்சி எப்படியிருப்பினும், குடியரசுத் தலைவரும் வினோபாவும் கலந்து கொள்ளும் நம் ஊர் நிகழ்ச்சியில் ஊரின் மூத்தவராகிய நீங்கள் இருப்பது முறை என்று அண்ணா கூறினார்” என்று தங்கவேலர் என்னிடம் கூறினார். அண்ணாவின் மதிப்பீடு, ஆயிரம் குதிரை ஆற்றலைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/317&oldid=788107" இலிருந்து மீள்விக்கப்பட்டது