உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சியில் ஆதாரக் கல்வி மாநாடு 277 கல்வி அமைச்சர் மாண்புமிகு சி. சுப்பிரமணியம் தலைமையில் ஒரு வரவேற்புக்குழு நியமிக்கப்பட்டது. அக் குழுவின் செயலாளனாக நான் நியமிக்கப்பட்டேன். பிற்காலத்தில் தமிழ்நாட்டுச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த திரு. க. அருணாசலம் கூட்டுச் செயலராக நியமிக்கப்பட்டார். சர்தார் வேதரத்தினம், காந்திதாசன், திரு. ஜி. இராமச்சந்திரன் போன்றோர் உறுப்பினர்கள். தமிழ்நாட்டில் எந்த ஊரில் அனைத்து இந்திய 11 ஆவது ஆதாரக் கல்வி மாநாட்டை நடத்துவது? காஞ்சிபுரத்தில் என்று முடிவு செய்தார்கள். அப்படியானால் அவ் வூர்ப் பெரியவர் ஒருவர், கூட்டுச் செயலராக இருப்பது நல்லது என்று குழு கருதிற்று. நான் அப் பக்கத்து ஊரான் என்பதால், என்னைக் கேட்டார்கள். நான் திரு. ஏ. கே. தங்கவேலு (முதலியார்) பெயரைச் சொன்னேன். 'தக்கவர்தான் அண்ணா கட்சியைச் சேர்ந்தவராயிற்றே: ஒப்புக் கொள்வாரா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 'ஊருக்கோ, மக்களுக்கோ ஏதாவது தொண்டு செய்தபடி இருப்பதே அவர் மூச்சு; அவர் இசைவார்’ என்றேன். ஒருமனதாக ஏற்றுக்கொண்டார். மாநாட்டு வரவு செலவுத் திட்டம் போட்டோம். சாப்பாட்டுப் பொறுப்பை, அப்போதைய சென்னை, சட்டமன்றப் பேரவை உறுப்பினராகிய திரு. ஏ. எம். சம்பந்தத்திடம் விட்டுவிடுவது, அதற்கு வரவேற்புக் குழு செலவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. பந்தல், அலங்காரம், தொண்டர்கள் வந்துபோகப் பயணச் செலவு ஆகியவற்றிற்காக 22 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியது. குழுவிற்குத் தலைமை வகித்தார் நிதிஅமைச்சர் சி. சுப்பிரமணியம். ■

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/316&oldid=788106" இலிருந்து மீள்விக்கப்பட்டது