உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 நினைவு அலைகள் தமிழ்நாட்டில் வினோபா பாவா நாடு தழுவிய இந் நல்லியக்கத்திற்காக வினோபா பாவா, 1956ஆம் ஆண்டு கோடையில் தமிழ்நாட்டில் பயணம் செய்தார். ஆந்திராவில் பயணம் செய்துவிட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்தார். தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் உள்ள பட்டரை பெரும்புதுரர் என்னும் தமிழ்நாட்டு ஊரில், அவரது தொண்டு தொடங்கிற்று. இது இரண்டு மூன்று திங்களுக்கு முன்னதாகவே தெரியும். வார்தாத் திட்டம் காந்தி அடிகளார், டாக்டர் ஜாகீர் உசேன், டாக்டர் சி. குமரப்பா, அரியநாயகம் போன்ற கல்வியாளர்களோடு, காந்திஅடிகள் கலந்து பேசி, வார்தா திட்டம் 'ஆதாரக் கல்வி என்றும் அழைக்கப்படும் செயல் வழிக் கல்வி முறை'யை உருவாக்கினார். சமுதாயத்திற்குப் பயனுள்ள செயல்களும் கல்வியின் இன்றியமையாத கூறாகும். குறைபாடு ஆனால், வளர்ந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அளவு மருந்தைப் பச்சைக் குழந்தைக்கு ஊசி வழி ஏற்றினால் சில வேளை, நேரெதிரான பலன் ஏற்படும். ஏழு வயது முடிந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட நல்ல திட்டத்தை ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு, அளவுக்குமேல் புகுத்தியதோடு, இரண்டு கைகளாலும் அள்ளி உண்பதுபோல, நிறையப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த முயன்றதால், பிற்காலத்தில் நாடு இதைக் கைவிட நேர்ந்தது. தமிழகத்தில் ஆதாரக் கல்வி மாநாடு அப்படிக் கைவிடுவதற்கு முன்பு ஒவ்வோர் ஆண்டும், அனைத்திந்திய ஆதாரக் கல்வி மாநாட்டை வெவ்வேறு மாநிலத்தில் நடத்துவது வழக்கம். 1956ஆம் ஆண்டின் மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்த எண்ணினார்கள். தமிழக அரசு, அதற்கு இசைந்தது. முன்னின்று நடத்த ஒப்புக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/315&oldid=788105" இலிருந்து மீள்விக்கப்பட்டது