பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சியில் ஆதாரக் கல்வி மாநாடு 275 ‘நாட்டின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடாக இருந்தால், காற்று மண்டலம் கெடாது; மழை வளம் குறையாது’ என்பது அறிவியல் அறிஞர்கள் கருத்து ஆகும். காடுகளைக் காக்கவேண்டிய நெருக்கடி, விளைநிலங்களைக் கட்டுப்படுத்தும் நிலைக்குத் தள்ளுகிறது. நிலமோ கொஞ்சம்; அதை நம்பி வாழ்வாரோ எண்ணற்றவர். எனவே, நிலமற்ற கூலிகள்’ என்னும் நோய், நம் நாட்டில் எங்கும் பரவி, வாட்டுகிறது. 'ஒடப்பர் கடலெனப் பெருகுவது நல்லது அல்ல.

  • நிலமர் உழவர்களுக்குச் சிறிது நிலமாவது கிடைக்

றற உழ ளுககு அது து @ மானால், அவர்கள் தம் தோள் உழைப்பை நம்பி, மானத்தோடு வாழ் முடியும்’ என்று கருதிய ஆன்றோர் சிலர். அவர்களில் தலையாய்வர், வினோபா பாவா என்ற அறவோர். அவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர். அண்ணல் காந்தி அடிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமான துறவி. இந்திய மக்களில் நிலப் பசியைப் போக்கும் பொருட்டு வினோபா பூமி தான இயக்கம் என்னும் பேரியக்கத்தைத் தொடங்கி நடத்தினார். வார்தாவிற்கு அருகில் உள்ள பயனார்’ ஆசிரமத்தில் தங்கி இருந்த வினோபா, போதிய அளவு முன்கூட்டியே அறிவித்துவிட்டு, சில சீடர்கள் பின்தொடர, ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டுக் கால்நடையாகவே நாடு முழுவதும் சுற்றி வந்தார்.

நிலக் கொடை இயக்கக் காந்தத்தில் ஈர்க்கப்பட்ட மக்கள், வினோபாவைத் தேடி வந்து கண்டு, நிலக் கொடைப் பத்திரங்களை அவரிடம் ஒப்படைப்பர்.

அப்படிக் கொடைகளாகக் கிடைத்த நிலங்களை, ஆங்காங்கே உள்ள நிலம் அற்ற உழவர்களுக்குப் பங்கு போட்டுத் தர அவ் வியக்கம் தக்க குழுக்களை அமைத்தது. பார்த்தவர்களே நம்ப முடியும் என்ற அளவிற்குக் கட்டுக்கடங்காத அளவு மக்களிடையே எழுச்சி பரவிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/314&oldid=788104" இலிருந்து மீள்விக்கப்பட்டது