பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப்பொலிவுபெற்ற திருவள்ளுவன் 291 “ஊரார் வீட்டுப் பிள்ளைகளை எல்லாம். அன்று பள்ளிக்குப் போகச்சொன்ன இயக்குநர், தம் பிள்ளையை மட்டும் அனுப்பாமல் வீட்டில் நிறுத்திக்கொள்வது சரியல்ல. நான் வழக்கம்போல் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்கிறேன்” என்றான். 'இளங்கன்று பயமறியாது’ என்று கூறிவிட்டு, “காலையில் அவனோடு சென்று பள்ளியில் விட்டுவிட்டு வாருங்கள், மாலையில் பள்ளிக்குச் சென்று அழைத்து வாருங்கள்” என்று காந்தம்மா. கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் அப்படியே நடந்தது. ஊருக்குக் காட்டிய வழியை நானும் பின்பற்ற முடிந்தது. திருவள்ளுவனின் பெயர்க் காரணம் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு வேளை, திருவள்ளுவனின் நண்பன், உன் பெயர் புதிதாக இருக்கிறதே! ஏன் இப்படிப் பெயரிட்டிருக்கிறார்கள்?’ என்று அவனைக் கேட்டான். திருவள்ளுவனுக்குப் பதில் சொல்ல இயலவில்லை. பெற்றோரைக் கேட்டுச் சொல்வதாகக் கூறினானாம். மாலை வீடு வந்து சேர்ந்ததும், “எனக்கு ஏன் திருவள்ளுவன் என்று பெயரிட்டீர்கள்” என்று எங்களைக் கேட்டான். “திருவள்ளுவர் என்பவர், உலக அறிஞர்களில் ஒருவர். மனித வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கிறார். அந்த நல்லவர் பெயரை உனக்கு இட்டால், நீ, அவரைப்போல் அறிஞனாகவும், நல்லவனாகவும் வாழ்வாய் என்று எண்ணி அந்தப் பெயரைச் சூட்டி இருக்கிறோம்.” - "அப்பா அவர் எழுதிய நூலுக்குப் பெயர் என்ன?” “திருக்குறள்.” "அப்பா, நம் வீட்டில் திருக்குறள் இருக்கிறதா?” "இருக்கிறது.” திருவள்ளுவன் அந்த நூலைப் பார்க்க விரும்பினான். அலமாரியில் இருந்து எடுத்தேன்; அவனிடம் கொடுத்தேன். படித்துக் காட்டுங்கள் என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/330&oldid=788122" இலிருந்து மீள்விக்கப்பட்டது