பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நினைவு அலைகள் "நீயே, இந்நூலைத் திற! அங்கிருப்பதைப் படித்துக் காட்டுகிறேன்” என்றேன், அப்படியே செய்தான். அவன் கண்ணில் பட்ட குறள் என்ன? இனிய உளவாக இன்னாத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று' இதை நிறுத்திப் படித்தேன். "அப்படி என்றால் என்ன பொருள்” “உனக்கு மாங்காய் பிடிக்குமோ?” “நன்றாகப் பிடிக்குமே!’ “வீட்டில் மாங் காய்களும் இருந்து, மாம் பழங்களும் இருந்தால், எதை எடுத்துக் கொள்வாய்.” ‘கேட்கனுமா? மாம் பழத்தை உண்பேன். பழம் இல்லாத போதே, மாங் காயைத் தொடுவேன்.” 'மாம் பழம்போல இனிய சொற்கள் இருக்கும்போது, காய்க்கு ஒப்பான சொற்களைப் பயன்படுத்தாதே’ என்கிறது இக் குறள் என்று விளக்கினேன். “நல்ல பாட்டு அப்பர்” என்றான். “மேலும் படிக்கட்டுமா?” --- - i. לל פ i ii i. . - 'இப்போதைக்கு ஒன்று போதும்” என்றான் வள்ளுவன். ஞானத்தை ஊட்டினான் பல வாரங்கள் ஓடின. நான் சிற்றுண்டிகூட உண்ணாது, அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். காரணம்? ஓர் நிகழ்ச்சிக்கு நேரமாகி விட்டது. அன்று காலை பார்வையாளர் அணி பெரிது. அவர்களைப் பார்ப்பதில் நேரங்கழிந்துவிட்டது. இப்படி எத்தனையோ முறை உண்ணாமலே அலுவல் பார்த்தது உண்டு; முட்டாள்தனம் என்று சிரிக்காதீர்கள். நான் கார் ஏறும் வேளை, காந்தம்மா காரண்டை வந்தார். குடும்ப விவகாரம் ஒன்று பற்றிக் காதில் போட்டு, என்ன செய்ய என்று கேட்டார். "நீயுமா, மற்றவர்களைப்போல, அவசரம் தெரியாது தொல்லைப்படுத்த வேண்டும்? குடும்ப விவகாரங்களில் முடிவு எடுக்க, முழு உரிமை கொடுத்து இருக்கிறேனே! என்னை ஏன் தொல்லைப்படுத்துகிறாய்!” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/331&oldid=788123" இலிருந்து மீள்விக்கப்பட்டது