உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.4 நினைவு அலைகள் 1956ஆம் ஆண்டு செப்டம்பர் என்று நினைவு. தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கடற்கரை சாலை, புகாரி ஒட்டல் மாடியில் அவருக்குத் தேனிர் விருந்து அளிக்கப்பட்டது. அண்ணன் குத்துாசியாரும், அண்ணி குஞ்சிதமும் விருந்திற்குச் சென்றார்கள். வள்ளுவன் உடன் செல்ல விரும்பினான்.அனுப்பி வைத்தோம்: சென்று உண்டு, மகிழ்ந்து, வந்து சேர்ந்தான். அந்த நிகழ்ச்சி பற்றிக் காவல்துறை, அரசுக்கு அனுப்பி வைத்த குறிப்பில், வள்ளுவன் என்ற ஆறு வயதுச் சிறுவன் கலந்து கொண்டதையும் அவன் பொதுக்கல்வி இயக்குநர் நெ. து. சுந்தரவடிவேலுவின் மகன் என்பதனையும் சேர்த்திருந்தது. எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு! வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல. அமைச்சர்கள் அதைப் படித்து விட்டுச் சிரித்தார்களாம். பலே கெட்டிக்காரனப்பா நான் மாணவனாக இருந்த காலத்தில் நாள்தோறும் கடற்கரைச்சாலை நெடுக, நடக்கத் தவறியது இல்லை. கல்வித்துறை அலுவலில் சேர்ந்த பிறகோ, கடற்கரைக்குச் செல்ல ஆண்டிற்கு அய்ந்தாறு நாள் ஒய்வு கிடைப்பதே பெரிதாகி விட்டது. ஒரு நாள் ஒய்வு கிடைத்தது. திருவள்ளுவனை அழைத்துக் கொண்டு காந்தம்மாவும் நானும், கடற்கரைக்குச் சென்றோம். காவல்துறைத் தலைமை நிலையத்திற்கு எதிரில், மணற்பரப்பில் உட்கார்ந்து காற்று வாங்கினோம். சில மணித்துளிகளில் பொழுது சாய்ந்தது. "அப்பா இதோ யார் வருகிறார், பாரப்பா?” என்றான் திருவள்ளுவன். அவன் காட்டிய பக்கம் திரும்பினேன் கல்வி அமைச்சரும். அவருடைய இல்லத்தரசி, திருமதி சகுந்தலாவும், அவர்களோடு, அளகிரிசாமியும் அவரது வாழ்க்கைத் துணைவியார், திருமதி அம்சாவும் வந்தனர். அவர்களைக் கண்டதும் நாங்கள் மூவரும் எழுந்து வனங்கினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/333&oldid=788125" இலிருந்து மீள்விக்கப்பட்டது