உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப் பொலிவு பெற்ற திருவள்ளுவன் 295 அனைவரும் அமர்ந்தபின், ஏதேதோ பேசினோம். பல மணித் துளிகளுக்குப் பிறகு, அமைச்சர், அலுவல் பற்றிப் பேசினார். குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிக்கு நாள் குறிப்பிட்டார். அது எனக்கு ஒத்துவருமா என்று கேட்டார். -- 'நீங்கள் அமைச்சர் ஆனையிட வேண்டியதுதானே! சரிப்படுமா என்று கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களே!” என்று வள்ளுவன் கூறினான். எல்லோரும் சிரித்துவிட்டோம். “பலே, கெட்டிக்காரனப்பா!” என்று அமைச்சர் திருவள்ளுவனைத் தட்டிக் கொடுத்தார். அண்ணன் அப்பா திருவள்ளுவனுடைய மதி நுட்பம் பெரிது; நம்ப முடியாத அளவு 'சூட்சும புத்தி பெற்றிருந்தான். ஒருமுறை கேட்டால் போதும், அப்படியே பதித்துக்கொள்வான். அவன் மழலைப் பருவம் தாண்டும் வேளை, குத்துரசி குருசாமியார் மகன், கெளதமனை, அண்ணன் என்று அழைப்பான். அது சரி குத்துாசி குருசாமியாரைப் பார்த்து, ‘அண்ணன் அப்பா” என்று விளித்தான், குழந்தைதானே என்று அவர் விட்டுவிடவில்லை. "சரியாகக் கூப்பிடக் கற்றுக்கொள், பெரியப்பா என்று கூப்பிடு” என்றார். “சரி” என்றான்.

ைதிருமதி குஞ்சிதத்தைக் காட்டி "இவர்களை எப்படிக்

கூப்பிடுவாய்?” என்று கேட்டார். ■ 疇 “பெரியம்மாவென்று கூப்பிடுவேன்” என்று வள்ளுவன் பதிலளித்தான். அப்புறம் ஒரு முறை கூட, பழையபடி தவறாகச் சொல்லவில்லை. திருவள்ளுவன் யோசனை ஒரு விடுமுறை நாள் முழுவதும் நான் கவலையில் மூழ்கியிருந்தேன். அது மற்றவர்களுக்குப் புலப்பட்டது போன்றே திருவள்ளுவனுக்குப் புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/334&oldid=788126" இலிருந்து மீள்விக்கப்பட்டது