உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 நினைவு அலைகள் "ஏன் அப்பா காலையில் இருந்து எப்படியோ இருக்கிறீர்கள்' என்று குழைந்து கேட்டான். “அலுவலில் ஏதாவது ஒரு பெரிய சிக்கல் இருக்கலாம். ஏற்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது. தவிக்கிறார் போலிருக்கிறது. மீ வேறு தொல்லைப் படுத்தாதே' என்றார் காந்தம்மா. "அப்பா! அது, உண்மையானால், கவலைப்படுவானேன்? “அது பற்றிய ஏடுகளை எடுத்துக் கொண்டுபோய், ஒர் அறையில் அமர்ந்து அமைதியாகப் படித்துப் பாருங்கள். இரண்டு தரங் கூடப் படியுங்கள். எது சரியென்று உங்களுக்குப் படுகிறதோ, அப்படி எழுதி அனுப்பி விடுங்கள். அரசு, வேறு முடிவு செய்தால் கவலைப் படவேண்டாம்” என்றான். “எது சரி என்று எப்படி முடிவு செய்வது? பெரும்பாலான பொதுமக்களுக்கு நன்மையாக இருப்பது சரியானது என்று காந்தியடிகளார் ஒரிடத்தில் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படியே செய்தேன். என் மனச்சான்றின்படி, குறிப்பு எழுதி அரசுக்கு அனுப்பி விட்டேன். திருவள்ளுவனின் தமிழ்ப் பற்று திருவள்ளுவன், தொடக்கத்தில் ஒரு குறளுக்குமேல் படிக்கவில்லை என்பதை முன்னரே குறிப்பிட்டேன். ஏறத்தாழ ஈராண்டுகளுக்குப் பிறகு, திருக்குறள் கற்க விரும்பினான். மறைமலையடிகளாரின் மகன், மறை மாணிக்கவாசகம் மாநகராட்சிப் பள்ளியில் பணி புரிந்து வந்தார்; அவர் தனிப்பட் முறையில் எனது குடும்ப நண்பர். அவரிடம் திருவள்ளுவன், குறட் பாக்களைக் கற்றுக்கொண்டான். முந்நூறு பாக்களுக்குமேல் கற்றுக்கொண்ட, வள்ளுவன் அவற்றை ஒப்புவிக்கவும் திறமை பெற்றிருந்தான். தாய் மொழியில்லாத, ஆங்கில மொழி வழி படித்த போதிலும் அவனுக்குத் தாய்மொழிப் பற்று அதிகம். தமிழ் படிக்க விரும்பினான்; படித்தான். சாதாரண தமிழ் மொழிப் பள்ளி மாணவர்கள் கற்பதைவிட அதிகமாகவே தமிழறிவு பெற்றிருந்தான். சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளிகளின் ஆய்வாளர் களில் ஒருவராக இருந்து ஒய்வு பெற்ற திரு. பத்மநாபன் விடுமுறை நாள்களில் தவறாது வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/335&oldid=788127" இலிருந்து மீள்விக்கப்பட்டது