பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3U2. நினைவு அலைகள் ஏதாகிலும் ஆசைப்பட்டால், தாயிடம் மட்டுமே சொல்லுவான். உலக சாரண இயக்கத் தலைவிக்கு விருந்து : ஆளுநர் பிரகாசாவும் கலந்து கொண்டார் சென்னை மாகாண ஆளுநர் மேதகு பூரீபிரகாசாவை, எங்கள் இல்லத்தில் வரவேற்கும் பேற்றினை வள்ளுவன் பெற்றான். அது, நாங்கள் தேடிய பேறல்ல; எங்கள் ஒதுக்கலையும் மீறி, வலிய வந்த பெரும்பேறு ஆகும். அது எப்படி நேர்ந்தது? சாரண இயக்கத்தின் பெண்கள் பிரிவின் அப்போதைய உலகத்தலைவி, டேம்லெஸ்லி ஆவார். அவர் ஒருமுறை சென்னைக்கு வந்தார். ஆளுநர் மாளிகையில் அவருடைய விருந்தாளியாகத் தங்கினார். சாரன இயக்கச் சார்பில், அம்மையாருக்குச் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம். சாரணியத் தலைமையகத்தில் வரவேற்பு ஆளுநர் பூரீபிரகாசா கலந்து கொண்டார். விருந்தாளியாக வந்த அம்மையாரின் விருப்பப்படி, இயக்க அலுவலர்கள் சிலரை அவர்களது இல்லத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மாநில பெண்கள் சாரணிய அணித்தலைவி. திருமதி கிளப்வாலா இல்லமும், சாரணர்களில் மாகாணத் தலைவனான என் இல்லமும் அந்நற் பேற்றிற்கு உரியதாயிற்று. என் இல்லம் சிறியது. பத்துப்பேரை அழைத்து விருந்தளிக்க முடியாத அளவு சிறியது. எனவே, நான், திருமதி கிளப்வாலா இன்னும் இரண்டு மூன்று பேர்களை மட்டுமே அழைத்தேன். தலைமையக விழாவிற்கு வந்தபோது, ஆளுநர், சிறப்பு விருந்தாளியின் நிகழ்ச்சித் திட்டத்தைப் பார்த்தார். சாரன மாகாண ஆணையர், நெ. து. சு. வின் இல்லம் செல்லுதல் என்பது ஆளுநர் கண்ணில் பட்டது. உடனே என் பக்கம் திரும்பி, “இவ்வளவு பெரிய விருந்தாளி வரும்போது, அதிலும் அவரி என் மாளிகையில் தங்கியிருக்கையில், என்னை ஏன் அழைக்க வில்லை?” என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/341&oldid=788134" இலிருந்து மீள்விக்கப்பட்டது