பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நினைவு ഋണസബ டாக்டர் இலட்சுமணசுவாமி முதலியார் தலைமையில் அரசு அமைத்த குழு, உள்ள காலி இடங்களை நிரப்ப, அய்ந்தாண்டு தவணை கொடுத்துவிட்டு, பிறகு சீரமைக்கலாம் என்ற யோசனைக்கு உடன் படவில்லை இந் நெருக்கடியால், அரசு மட்டத்தில் கல்வி பற்றிய வெள்ளை அறிக்கை என்ற பெயரில், ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அதன் முதல் வடிவம் எனக்கு அனுப்பப்பட்டது; என து விரிவான கருத்துகள் கேட்கப்பட்டன. உலகம் - அதுவும் அலுவல் உலகம், தெரியாத நான் - விரிவாகம் கருத்துகளைத் தெரிவித்தேன். வெள்ளை அறிக்கை என்ன சொல்லிற்று? சிறுவர் சிறுமி, களை அய்ந்து வயது முடிந்ததும் பள்ளியில் சேர்க்கும் பழக்கத்தை விட்டு விட்டு, ஆறாவது வயது முடிந்த பிறகே சேர்க்க வேண்டும் 'படிப்பின் தொடக்கத்தை ஒராண்டு தள்ளிப் போடவேண்டும் 'தொடக்கப் பள்ளிகளில் அய்ந்து வகுப்புகள் இருப்பதற்குப் பதில், நான்கு வகுப்புகளே இருத்தல் வேண்டும். “உயர்நிலைப் பள்ளிப் படிப்பு பதினோரு வகுப்பாக இருப்பதற்குப் பதில் பத்தோடு முடிய வேண்டும். 'பதினோரு ஆண்டுப் படிப்பை, பத்து ஆண்டுக்குள நிரப்பிவிட வேண்டும். "புதிய அய்ந்தாம் வகுப்பில் இருந்துதான் ஆங்கிலம் கற்பிவேண்டும். 'எட்டாம் வகுப்பில் தொடங்கி பத்தாம் வகுப்பு முடிய இந்து அல்லது வேறு மொழியைக் கற்பிக்க வேண்டும். இதற்குப் பெயர் 'மும்மொழிக் கொள்கை”. 'தாய்மொழி வாயிலாகக் கற்பிக்க வேண்டும். இவை முக்கியமான ஆலோசனைகள். என் கருத்துகள் நான் தெரிவித்த கருத்துகள் என்ன? "இக் காலச் சிறுவர் சிறுமியரை-முடியுமானால் நான்கு வயது பள்ளிக்கு அனுப்புவதே நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/343&oldid=788136" இலிருந்து மீள்விக்கப்பட்டது