பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 நினைவு அலைகள் வரதராசுலு நாயுடு எதிர்ப்பு இவ்வறிக்கை சட்ட அவையில் வைக்கப்பட்டது. சட்டமன்றம் அப்போது, இப்போதைய கலைவாணர் அரங்கு உள்ள இடத்தில் இருந்தது. டாக்டர் பி. வரதராசுலு நாயுடு அப்போது காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர். அவர், இவ் வறிக்கை பற்றி மனக்குறை பட்டார். அவைக்கு வருமுன்பே, முதலமைச்சர் காமராசரிடம் தமது எதிர்ப்பை எடுத்துரைத்தார். எனவே, அறிக்கையைச் சட்டமன்ற இரு அவைகளின் பொறுக்குக் குழுவிற்கு அனுப்புமாறு அவையில் முன் மொழியப் பட்டது. முறைப்படி அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. காமராசர் வினா அம் முடிவு எடுக்கும்போது, நான் அலுவல்பற்றி, அலுவலர் பகுதியில் அமர்ந்து இருந்தேன். முடிவு எடுக்கப்பட்டதும் முதலமைச்சர் காமராசர், என்னை அருகில் இருந்த தம் அறைக்கு அழைத்துப் போனார். "குறைகள் நிறைந்த இவ் வறிக்கைக்கு எப்படி இசைவு கொடுத்தீர்கள்?' என்று அமைதியாகவே கேட்டார். நான் “முக்கிய ஆலோசனை ஒவ்வொன்றையும் அழுத்தமாக எதிர்த்து எழுதி அனுப்பியுள்ளேன்” என்று பணிவோடு பதில் கூறினேன். "அப்படியானால், ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று மடக்கினார். "என் கருத்து மாறுபாட்டைக் கல்வி அமைச்சரின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு போனேன். அவரை மீறி உங்களிடம் வந்து சொல்வது, அலுவல் ஒழுங்கிற்குப் புறம்பானது என்று எண்ணி விட்ட தவறுக்காக வருந்துகிறேன்” என்றேன். "நீங்கள் செய்தது சரிதான். உங்கள் அமைச்சரைத் தாண்டி என்னிடம் வராதது சரிதான். 'நீங்கள் அலுவலர், பொறுக்குக்குழுவில் இருக்க முடியாது. "ஆனால், வல்லுநர் என்ற முறையில் முக்கியமானவை பற்றி உங்கள் கருத்தைக் குழுவின் முன் கேட்கச் சொல்லப் போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/345&oldid=788138" இலிருந்து மீள்விக்கப்பட்டது