உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 நினைவு அலைகள் வேண்டாம் என்றார்” துணைவேந்தர் டாக் இலட்சுமணசுவாமி முதலியார். "சட்டமன்றக் குழுவிற்கு உரிமை இல்லையா?” என்று சிலர் சலசலப்பு எழுப்பினர். “கல்லூரிக்குச் சேர விழைவோருக்கு என்ன தகுதி தேவை என்பதைத் தன்னாட்சி உரிமையுடைய பல்கலைக்கழகம் முடிவு செய்யவேண்டும்.” "நாம் தலையிட வேண்டாம்” என்று கல்வி அமைச்சர் தீர்ப்புக் கூறவும், அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி உரிமையை மாண்புமிகு சி. சுப்பிரமணியம் காத்தார். 'அவ்வளவு நல்லெண்ணம் பல்கலைக் கழகத்தில் ஊறிற்றா?” என்பது கேள்வி. சட்டமன்றப் பொறுக்குக்குழு ‘கல்வி பற்றிய வெள்ளை அறிக்கையின்மேல் பரிந்துரைகளை எல்லாம் 1956ஆம் ஆண்டிற்குள் க்ொடுத்துவிட்டது. ஆனால், அவற்றை உடனே சட்ட மன்றத்தில் வைத்து நிறைவேற்றி விடவில்லை.

  • - 'சில திங்களில் பொதுத் தேர்தல் நடக்கவிருந்ததால், புதிய

சட்ட அவை முடிவு எடுப்பதே முறை என்று அரசு கருதியது. எனவே, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தள்ளிற்று. பொதுத் தேர்தல் நடந்தது. அதுவரை தேர்தலில் நிற்காத, திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி, போட்டியிட்டது. பதினைந்து இடங்களை வென்றது. புதிய சட்ட மன்றத்தில், மேற்படி பரிந்துரைகள் ஆலோசனைக்கு வைக்கப்பட்டன. மும்மொழிக் கொள்கை உள்பட எல்லாப் பரிந்துரைகளும் ஒப்புதல் பெற்றன. புதிய ஆட்சியிலும் மாண்புமிகு சி. சுப்பிரமணியம் கல்வி அமைச்சராகத் தொடர்ந்தார்; கல்வி வளர்ச்சியைத் தொய்வின்றி ஊக்குவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/349&oldid=788142" இலிருந்து மீள்விக்கப்பட்டது