பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 - நினைவு அலைகள் ஆளுநருடன் பேட்டி அவ்வளவுதானா? அந்த இராச்சியத்தின் முன்னாள் மன்னரும் (மகாராஜா) அப்போதைய இராஜப் பிரமுகருமான ஆளுநரைப் பேட்டி காணவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். நல்ல அண்ணன், செல்லத் தம்பிக்கு வழிக்காட்டுவதுபோல, திரு. சுந்தரராசுலு எனக்கு வழி காட்டினார். எப்படியோ போகட்டும் என்ற சலிப்பு உணர்வே அவரிடம் தென்படவில்லை. ஆளுநர், படாடோபமின்றி, அன்போடு அளவளாவினார். "கல்வி, மனித வளர்ச்சியின் வேர்” என்று எடுத்து உரைத்தார். மற்றப் பகுதிகளுக்கு முன்பே, கேரள மக்கள் அதை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்றார். அப்போதைய சென்னை மாகாணம் கல்வி வளர்ச்சியில் தனி அக்கறை காட்டுவதைப் பாராட்டி வரவேற்றார். அரசின் நிதி உதவி இன்றியே பற்பல ஊர்களில் மக்கள்குழு’ நிறுவி, மாணவர்களுக்குப் பகல் உணவு போடுவதை வரவேற்றார். நம் மக்களின் தயாள குணத்தைக் கல்வி மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்றார். * சென்னை மாகாண அரசு சாதி பாராமல், வருவாய்க் கணக்கு கேளாமல் எல்லோர்க்கும் பள்ளியிறுதிவரை இலவசக் கல்வி கொடுக்கப்போவதை அடக்கமாகத் தெரிவித்தார். சரியான முடிவு என்று வரவேற்றார். "பேரரசரின் அருட்பார்வையில் வாழ்ந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டு மக்களை எங்களால் முடிந்த அளவு, பரிவோடு நடத்துகிறோம்” என்று பணிவாக நான் கூறினேன். 'இம்மாற்றம் பற்றி எனக்கு எள்ளளவும் கிலேசம் இல்லை. 'ஏழைகளைப் பற்றியே எப்போதும் எண்ன்னிக் கொண்டிருக்கும் ஒரு செயல் வீரரின் கைகளில், முதலமைச்சர் இடம் ஒப்படைக்கிறேன்’ என்ற முழு நிறைவோடு இருக்கிறேன். "அவர்களின் நலன்கள் நன்றாகக் கவனிக்கப்படும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று மாமன்னர் கள்ளங்கபடம் இல்லாது உரைத்தார். - - ஒர் உயர்ந்தவரோடு பேசி மகிழ்ந்த உணர்வோடு, ஆளுநரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/351&oldid=788145" இலிருந்து மீள்விக்கப்பட்டது