பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றவர்களுக்கு வழிவிட்டேன் 315 பதவி உயர்வு வாய்ப்பு திருவிதாங்கூர் பகுதியில் அரசு கல்வித்துறையில் பதவி வாய்ப்புகளும் பதவி உயர்வு வாய்ப்புகளும் நம் மாநிலத்தைவிட அதிகமாக இருந்தன. அங்குப் பட்டதாரி ஆசிரியர்களில் பாதிப் பேருக்குத் தேர்வு (செலக்ஷன்) உண்டு. நம் மாகாணத்தில், மூன்றில் ஒருவருக்கே, தேர்வு நிலை வழங்கப்படும். அதற்குத் தகுதியாகும் பொருட்டு, கல்வி விதிமுறைகளில் தேர்ச்சி பெறுவதோடு கணக்கு பற்றிய தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். மொத்த எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், சென்னை மாநிலத்தில் அரசு ஊழியத்தில் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சொற்பமே. ஏன்? உயர்நிலைப் பள்ளிகளில் மிகப் பெரும்பாலானவை, தனியார் நிர்வாகத்திலோ, மாவட்ட ஆட்சிக் குழுவிடமோ இருந்தன. விளைவு என்ன? அநீதி இழைக்கப்பட்டது மன்னர் ஆட்சியிலிருந்து நம்மோடு இணைந்தவர்களில் தேர்வு நிலையோடு வந்தவர்கள், விழுக்காடு அதிகம். அவர்கள் நம் பட்டதாரி ஆசிரியர்களோடு போட்டியிடும் போது, மாவட்டக் கல்வி அலுவலர்களாகவோ, பதிவு பெற்ற தலைமை யாசிரியர்களாகவோ வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன. அப் பகுதியில் பதினைந்து ஆண்டு பணி புரிந்தவர், தேர்வு நிலையோடு வந்தால், இங்கு அவ்வளவு பணிமூப்பு உடையவர் சாதாரண நிலையிலேயே இருந்தார். - அடுத்த தேர்வுநிலை வரும்போதாவது கிடைக்குமா? கன்னியாகுமரிக்காரருக்கே அதிக வாய்ப்பு கிட்டும். அவர், எந்தத் தேர்வும் எழுதத் தேவையில்லை. ஒரே பணிக்காலம் உடைய சென்னை மாகாண அரசு ஆசிரியர், தேங்கிக் கிடக்க குமரி மாவட்டப் பட்டதாரி ஆசிரியர், தேர்வுநிலை பெற்று, பதிவு நிலைக்கு நெருங்கி விடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/352&oldid=788146" இலிருந்து மீள்விக்கப்பட்டது