உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 நினைவு அலைகள் மருமகனுக்காக மகன் தேங்கி நிற்கும் நிலையை, உயர்மட்ட அலுவலர்கள் அக்கறை காட்டியிருந்தால், போக்கி இருக்கலாம். இங்கேயே இருந்தவர்களுக்கும் பாதுகாப்பு தந்திருக்க வேண்டும். இணைந்தவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பாதுகாக்கப் படுகையில், உள்ளவர்களுக்கு இருந்த கட்டுகளைத் தளர்த்தி இருக்க வேண்டும். அதோடு, இங்குள்ள தேர்வு பதவி விழுக்காட்டினை உயர்த்தி இருக்கவேண்டும். மாற்றாந் தாய்ப் போக்கில் நிர்வாக இயந்திரம் இயங்கிற்று. ஆட்சி, இதில் நான் கூறிய பாதுகாப்புப் பரிந்துரைகளைப் பொருட்படுத்த வில்லை. விளைவு? இணைந்தவர்கள் இருந்தவர்களைவிட விரைவாகப் பதவி உயர்வுகள் பெற முடிந்தது. அவர்கள் உயர்வுகள் பெற்றதில் தவறில்லை. முன்னரே இருந்து உழைத்தவர்கள் கீழே தள்ளப்பட்டது அநீதி. 米 1956ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள், நான் வெளியூர் சென்று இருந்தேன். காந்தம்மாவும் வள்ளுவனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். - ஒர்நாள் காலை 4 மணிபோல் தொலைபேசி அலறிற்று. காந்தம்மா வந்து, தொலைபேசியில் பேசினார். "அம்மா! அய்யா ஊரில் இருக்கிறாரா?” என்று ஒருவர் பதற்றத்தோடு கேட்டார். “வெளியூர் சென்று மூன்று நாள் ஆயிற்று” என்று அம்மா பதில் கூறவும். 1. ‘நேற்றிரவு வண்டியில் பயணம் செய்யவில்லையே?’ என்று பேசியவர் கேட்டார். - 'இல்லை. மூன்று நாளைக்கு முந்தியே புறப்பட்டுப் போயிருக்கிறார்” என்று காந்தம்மா மீண்டும் கூறினார். H. அது வரையில் வெளியில் இருந்து பேசியவரும் ப்தற்றத்தில் தான் யார் என்று சொல்லவில்லை; காந்தம்மாவும் கேட்கவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/353&oldid=788147" இலிருந்து மீள்விக்கப்பட்டது