பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றவர்களுக்கு வழிவிட்டேன் - 317 நான் சென்னையைவிட்டுப் புறப்பட்டுப் போய் மூன்று நாளாகிறது என்று இரண்டாம் முறை உறுதிப்படுத்தியதும், "அம்மா! எங்கள் வயிற்றில் பால் வார்த்தீர்கள். “நான், முத்துசவரி, மேலப்புனவாசல் தொடக்கப்பள்ளி ஆசிரியர். -- --- "திருச்சிக்குச் சொந்த வேலையாக வந்தேன். வந்த இடத்தில், து.ாத்துக்குடி விரைவு வண்டி அரியலூரில் கவிழ்ந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். -- "சில நாள்களுக்கு முன்பு, தமிழ் நாளிதழ்கள் சிலவற்றில் இயக்குநர் அய்யா, திருநெல்வேலி மாவட்டத்தில், 'பகல் உணவு' ஏற்பாடு செய்யும் பொருட்டுப் போக இருக்கிறார் என்ற செய்தியைப் பார்த்தேன். == “இரயில் கவிழ்ந்தது, என்றதும் அய்யா அவ் வண்டியில் பயணம் செய்து இருப்பார்களோ என்று அதிர்ச்சி அடைந்தேன். "அந்த அச்சத்தில் அகாலத்தில் திருச்சி தொலைபேசி அலுவலகத்தில் இருந்து கூப்பிட்டுவிட்டேன். “தாயே! என்னை மன்னியுங்கள். முன்னர் அறிவித்தபடி இன்றிரவு பயணம் செய்யாததால், நம்ம அய்யா, ஆபத்து இன்றித் தப்புவித்துவிட்டார். --- “கர்த்தர், எப்போதும் அவரைக் காப்பார் அம்மா” என்று முடித்தார். - 1941இல் இளநிலை ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த இவர் தம் பொதுத் தகுதியை வளர்த்துக் கொண்டார். இடைநில்ை ஆசிரியராக உயர்ந்தார். நல்ல கல்விப் பணியாற்றினார். என்னிடம் ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்டிருந்த எண்ணற்ற ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார். # = தம் மகன் அபூர்வசாமியை முதுகலைப் பட்டதாரியர்க்கினார். அரசுக் கல்லூரிப் பணியில் துணைப் பேராசிரியராகச் சேர்த்துவிட்டார். = - அவ் விளைஞர், விரைந்து, கல்லூரிப் பேராசிரியராக உயர்ந்தார். கல்லூரி முதல்வராக இருப்பதாகக் கேள்வி. முத்துசவரி இருக்கும் மட்டும் மகனுடைய நலன் பற்றி அவ்வப்போது எனக்கு அறிவிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/354&oldid=788148" இலிருந்து மீள்விக்கப்பட்டது