பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ ശുഖത്തു வழிவிட்டேன் 319 wo - அவ் விபத்து, ஆட்சியிலோ, நிர்வாகத்திலோ இருந்த எவருடைய கவனக் குறைவாலோ, விழிப்பின்மையாலோ நேரிடவில்லை. LE , எனினும், இந்திய இரயில்வே அமைச்சர், திரு. லால்பகதூர் சாஸ்திரி, தமது பதவியைத் துறந்துவிட்டார். அப்போது, ஒ. வி.அளகேசன் அத்துறை இணை அமைச்சராக இருந்தார். - அடுத்து வந்த பொதுத் தேர்தலில், இவ் விபத்தைப்பற்றி பிரசாரம் செய்தே நாடாளுமன்றத்திற்கு நின்ற ஒ. வி. அளகேசனைத் தோற்கடித்தார்கள். == எதற்கோ, யாரோ விலை கொடுப்பது, தொடர்கதைதானே. பணிச்சுமை அக் கால கட்டத்தில், கல்வித்துறை , ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள், இயக்குநர் வரை தங்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டார்கள் எனலாம். காலை எட்டரை மணிக்கு ஏதாவது ஒரு பயணிகள் விடுதியில் இருந்து புறப்படுவோம். இரவு பதினோரு மணிக்கு முன்பு திரும்புவது அரிது. இப்படித் தொடர்ந்து மூன்று நான்கு நாள்கள் நடக்கும். இரண்டொரு நாள் இடைவெளிக்குப் பிறகு வேறொரு மாவட்டத்தில் அதே போன்ற அலைச்சல் இருக்கும். ஆய்வாளர்கள், அரை வேளை முழு வேளையோடு வேலை முடிந்து விடும்: அலுவலர் மாவட்டந்தோறும் மாறுபடுவார். - . . . இயக்குநர் ஒருவரே, தொடக்கக் கல்விக்கு, நடுநிலைக் கல்விக்கு, உயர்நிலைக் கல்விக்கு, கல்லூரிக் கல்விக்கு-பொது நூலகக் கல்விக்கு அரசு தேர்வுகளுக்கு-அத்தனைக்கும் ஈடு கொடுத்தேன். வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கிடைத்த நேரம் உண்டு, பாடுபட்டேன். - சிலபோது பத்துப் பன்னிரண்டு மணிகள் வரை இயற்கையைக் கட்டுப்படுத்திப் பட்டபாடு, பிறர் எவருக்கும் நேரிடக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/356&oldid=788150" இலிருந்து மீள்விக்கப்பட்டது