பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 நினைவு அலைகள் / - o f 1956ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் திருநெல்வேலி சுற்றுப் பயணத்தின்போது, வானம் பிளந்ததுபோல் பத்து மணித்துளிகள் கொட்டும். = சாலையிலிருந்து பள்ளிக்குப் போவதற்குள், குடை பிடித்தாலும் நனைந்து போக நேரிடும். - ஒரு பக்கம் நனைந்த உடையோடு, கூட்டத்தில் உரையாற்றுவேன். அந்தச் சூட்டில் ஆடை உலரும். அடுத்த ஊருக்குச் சென்று இறங்கும் போது மறுபடியும் சிறிது நனைவோம். மீண்டும் வெயில்; உலர்தல். இப்படியாகத் துன்பப் பட்டோம். எப்படியோ எதையும் ரத்து செய்யாது நடத்தி முடித்துச் சென்னைக்கு இரயில் ஏறினேன். + . முகம்மது கனி அப்போது மதுரை மண்டல ஆய்வாளர் திரு. முகமது கனி, “அய்யா! இனிமேல் எந்த ஆண்டும் நவம்பர் 20 முதல் 27 வரை சென்னையை விட்டு, சுற்றுப் பயணம் வராதீர்கள். “சென்ற அய்ம்பது ஆண்டு புயல் கணக்கை நான் அண்மையில் எங்கோ காண நேர்ந்தது. -- “மேற்கூறிய இரு நாள்களுக்கிடையில் வங்கக் கடலில் புயல் உருவாகி , வேதாரண்யத்திற்கும் ஒரிசாவிலுள்ள கட்டாக்கிற்கும் இடையில் எங்காவது கரை கடந்துள்ளது; அப் பகுதியில் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. “மாவட்டக் கல்வி அலுவலர், கி. வெங்கடசுப்பிரமணியம் மேற்படி தேதிகளுக்குள் மூன்று நாள்களைச் சுட்டிக் காட்டி அழைத்தபோதே எனக்கு இது தெரியும். புயல் பருவம்; பொறுங்கள்’ என்று எழுதவும் எண்ணினேன். "மக்களே நடத்தும் பகல் உணவுத் திட்டத்தின் ஆர்வத்தைக் குறைக்குமோ என்று கருதி சும்மா இருந்து விட்டதால், உங்களுக்குத் தேவைக்குமேல் தொல்லை கொடுத்து விட்டோம். மன்னியுங்கள்’’ என்று வேண்டிக் கொண்டார். + *է: * திரு. முகமது கனி பற்றிச் சில சொற்கள். இவர், திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/357&oldid=788151" இலிருந்து மீள்விக்கப்பட்டது