பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 * * நினைவு அலைகள் கல்லூரி வளாகங்களுக்கே பழக்கப்பட்டிருந்த அவர், கரடு முரடான களப்பணிகளை ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் ஏற்றுக்கொண்டார். மற்றோர் ஆங்கிலப் பேராசிரியர் திரு. எஸ். பழனிசாமியும் அதைப் போன்றே, கற்பிக்கும் பிரிவிலிருந்து, நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் துணை இயக்குநராகப் பணி புரிகையில் மறைந்தார். அவர் எனக்குப் பரதனாக விளங்கினார். பிறிதோர் பேராசிரியர் சையது யாகூப்பிற்கும் நிர்வாகப் பிரிவில் வாய்ப்புப் பெற்றுத் தந்தேன். - = -- - அப் பதவியிலும் பின்னர், இயக்ககத்தில் துணை இயக்கு நராகவும் அவர் ஆற்றிய பணி சீரியதாகும். அவர் பின்னர் கல்லூரிக் கல்வி இயக்குநராக உயர்ந்தார். . அவரைப் போன்ற விசுவாசிகளால்தான், நான் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளில் முனையாது, ஒருமனப்பட்டு மக்களுக்க உளமியம் செய்ய முடிந்தது. தென் மாநிலங்கள் நான்கிற்குமாக, பிராந்திய ஆங்கிலப் பயிற்சிக் கழக்ம், பெங்களுரில் நிறுவப்பட்டபோது, அதன் முதல் இயக்குநராக திரு. முகமது கனி நியமிக்கப்பட்டது அவரது சிறப்புக்குச் சான்றாகும். அங்குச் சில ஆண்டுகள் சிரிய பணி ஆற்றிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் காலை, அவர் சென்னையில் என் இல்லத்திற்கு வந்தார். o is 'அய்யா ஒர் முக்கிய விஷயம் பற்றி நான் தங்களைக் கலந்து கொண்டு முடிவு எடுக்கலாம் என்று வந்திருக்கிறேன்” என்றார். என்ன விஷயம்? கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் புதிதாகத் தொடங்க இருக்கும் பல்கலைக் கழகத்தின் முதல்துணை வேந்தராக வரும்படி, கேரள மாநிலத் கல்வி அமைச்சர் மாண்புமிகு முகமது கோயாவே, தொலைபேசி வாயிலாக அழைத்தார். பதில் கூற இருபத்து நா ன்கு மணி அவகாசம் கேட்டிருக்கிறேன். இருக்கிற பதவியிலேயே நான் தொடர வாய்ப்பு உள்ளது.' "அந்நிலையில் நான் என்ன பதில் சொல்ல?” என்று என் ஆலோசனையைக் கேட்டார். அப்போது நான் கல்வி ஆலோசகன் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/359&oldid=788153" இலிருந்து மீள்விக்கப்பட்டது