பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 1956 323 "தானாக வரும் அப் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். "மாண்புமிகு முகமதுகோயாவை நம்பிப் போகலாம். “நான் இயக்குநராகப் பணி புரிந்தபோது, மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய, பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், அண்ணாமலைக்குப் பேராசிரியராகச் சென்று மதுரைத் துணைவேந்தர் ஆனார். அதேபோல், நீங்களும் துணைவேந்தர் ஆகுங்கள். காலத்தால் நீதி கிடைக்கிறது” என்றேன். அப்படியே ஏற்றுக் கொண்டார். முகமதுகனிக்கு இரண்டாம் முறை துணைவேந்தர் பதவி கொடுக்க முன்வந்தபோதும் சென்னைக்கு வந்து கலந்து ஆலோசித்தார். என் கருத்தை ஏற்றுப் பதவியை ஏற்றார். ஆறாண்டு, துணைவேந்தராகப் புகழோடு பணிபுரிந்த திரு. முகமது கணி சென்னையில் வாழ்ந்து அண்மையில் மறைந்தார். பண்ழய விசுவாசம் மாறாத பணியாளராக விளங்கிய அவர் புகழ் பல்லாண்டு வாழட்டும். 36. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 1956 நான் இயக்குநரான சில திங்களில், சென்னை சைத்ாப் பேட்டை ஆசிரியக் கல்லூரி முதல்வர் பதவி காலியாவதாக இருந்தது. நேர்முகத்தேர்விற்கு இடமிருந்தது. அதைப் பயன்படுத்தினால் என்ன? அரசு மட்டத்தில் கேள்வி பிறந்தது. - பல கோணங்களில் இருந்து பார்த்த பிறகு, தனியார் கல்லூரிகளில் இருந்த இருவரைக் குறிப்பிட்டு. அவர்களைக் கேட்டுப் பார்க்கச் சொன்னார்கள். அரசு வாய்மொழி குறிப்பிட்ட வரிசையில், இருவரையும் நேரில் கேட்டுப் பார்த்தேன். மூதறிவு உடைய இருவருமே மறுத்து விட்டார்கள். அரசு ஊழியம் என்கிற விலங்கை அவர்கள் விரும்பவில்லை. அரசுப் பணியில் என்ன செய்திருக்க முடியுமோ அதைவிட அதிகம் சாதித்துள்ளார்கள்; நிலையிலும் பெருநிலை பெற்று வாழ்கின்றார்கள். * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/360&oldid=788155" இலிருந்து மீள்விக்கப்பட்டது