பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 நினைவு அலைகள் 'இல்லாவிட்டால், அவருக்கு எதிராக ஏதும் சொல்லாதீர்கள். 'சொல்லமாட்டீர்கள்’ என்ற உறுதி தக்கவர் வாயிலாக அவருக்கு எட்டட்டும். o “நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றேன். பிந்தியதைக் கவனித்துக் கொண்டார். அண்ணாமலை பல்கலைக் கழகம் இசைவு கொடுக்க மறுத்தும் தேர்தலில் இறங்கினார். வெற்றி பெற்றார். ஆனால், பேராசிரியர் பதவி பறிபோயிற்று. தமிழகராதி டாக்டர் ஆ. இலட்சுமணசாமி முதலியார் பரிவு காட்டினார். "தமிழ் அகராதி தொகுக்கும் திட்டத்தைத் தீட்டி, டாக்டர் செட்டியாரிடம் அப் பொறுப்பைக் கொடுத்தார். தமிழுக்கு, உருப்படியான பணியினைச் செட்டியார் மூலம் செய்து காட்டினார். தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956ஆம் ஆண்டு, நம் வரலாற்றில், சிறப்பான ஆண்டு. + பிற் காலத்தில், யூனெஸ்கோ, தொடக்கக் கல்வி மாநாடுகள் ஆகிய மாநாடுகளுக்குப் பரிந்துரை செய்யுமளவிற்கு, சிறப்புடைய மக்கள் மதிய உணவுத் திட்டம் அவ் வாண்டே முளைத்துத் தழைத்தது. அவ் வாண்டில்தான் மொழிவழி மாநிலங்கள் அமைந்தன. மொழிவழி மாநிலங்கள் அமைந்து விட்டால், அந்தந்த மாநில மொழிவழி ஆட்சியும் நிர்வாகமும் நடப்பதுதானே முறை. இதன்பொருட்டு, 1956இல் காமராசர் முதலமைச்சராக இருக்கையில் சட்ட அமைச்சர் சி. சுப்பிரமணியம் ஆட்சி மொழிச் சட்டம்’ ஒன்றினைக் கொண்டு வந்தார். சென்னைச் சட்ட மன்றம் ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டது. மேற்படி சட்டத்தை உருவாக்கும் முன்பும், நிறைவேற்றிய பிறகும் அமைச்சர் தலைமையில் உயர்மட்ட அலுவலர் கூட்டம் நடந்தது. அவ்விரு கூட்டங்களிலும் முன்னோடியாகக் கல்வித்துறை தமிழ்மொழி வாயிலாக நிர்வாகம் நடத்த முன்வருவதாகக்" கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/363&oldid=788158" இலிருந்து மீள்விக்கப்பட்டது