உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 1956 327 குறித்துக் கொண்டார்கள். முன்னுரிமை கொடுத்து ஆணை பிறப்பிக்கவில்லை. மந்தையோடு கலந்து விட்டது கல்வித் துறையும். சொல்லாக்கம் சென்னைப் பல்கலைக் கழகம், தமிழைப் பாடமொழியாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டும் என்பது தெளிவானபோது, பட்டதாரி ஆசிரியப் பயிற்சி”க்கான தமிழ்ச் சொற்களை உருவாக்க, ஒரு குழுவை நியமித்தது. பொதுக்கல்வி இயக்குநராகிய நான் குழுத் தலைவராகவும், சைதை ஆசிரியர் கல்லூரி முதல்வர், திரு. மு. ரா. பெருமாள் முதலியார் துணைத் தலைவராகவும்- - திருநெல்வேலி திரு. இ. மு. சுப்பிரமணிய பிள்ளை செயலாளராகவும், வேறு சிலர் உறுப்பினர்களாகவும் இருந்தோம். பல அமர்வுகளுக்குப்பின், தேவையான சொற்களைத் தொகுத்தளித்தோம். திருவாளர் இ. மு. சுப்பிரமணியம் தமிழ்ப் புலமை உடையார்; தமிழ்ப் பற்றாளர். சொற்களை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர். திரு. மு. ரா. பெருமாள் முதலியாரும் அம் மூன்று திறங்களைப் பெற்றவர். - இக் குழுவின் வேலைபற்றி, அமைச்சருக்கு அவ்வப்போது தகவல் கொடுத்து வந்தோம். 'சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ என்ற ஒரமைப்பு பல்லாண்டுகளாகத் தமிழ்ப் பணியாற்றி வருகிறது. பல்லாண்டு காலம் இ. மு. சுப்பிரமணியம் அதன் அமைப்பாளர். அவர் பரிந்துரைப்படி, திரு. மு. ரா. ப்ெருமாள் முதலியாருக்குச் சிறப்புப் பட்டமொன்று கொடுக்க, மேற்படி சங்கம் முடிவு செய்தது. இது உடனே செய்தித் தாள்களில் வெளியாயிற்று. அதைக் கவனித்த அலுவலர் வர்க்கம் செயல்பட்டது. அரசு அலுவலர்கள், அரசு கொடுக்கும் விருதுகளைத் தவிர வேறெதையும் பெறக்கூடாது என்று வாய்மொழி ஆணையிட்டது. தகுதி பற்றி வரவேண்டிய சிறப்பினை, அரசு ஊழியம் என்னும் கூண்டு தடுத்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/364&oldid=788159" இலிருந்து மீள்விக்கப்பட்டது