உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 - நினைவு அலைகள் அப்போதுதான், டாக்டர் மு. வ. அரசு பதவியை மறுத்ததின் பொருள் விளங்கிற்று. - மற்றோர் செய்தி. பாடநூல் போட்டி "தமிழில் பல இயல் நூல்களை வெளியிட்டு விட்டால், பாட நூல்கள் எங்கே? என்ற கேள்வி எழாது. “கல்லூரி மட்டத்தின் பல நிலைகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வெளியிடத் திட்டம் தீட்டுங்கள். “பாட நூல்களாகப் பயன்படாவிட்டாலும், தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தவாகிலும் அவை உதவட்டும். அதற்காக ஒரு திட்டம் தீட்டிக்கொடுங்கள்” என்று கல்வி அமைச்சர் ஆணை இட்டார். --- “சிந்தித்தேன்; தீட்டினேன்; அமைச்சரோடு பேசி, செப்பனிட்டேன். இறுதியில் அரசுக்கு அனுப்பிய திட்டத்தின் வரி வடிவகங்கள் இதுதான்: - * (1) புகுமுக மட்டம் (2) இளங்கலை நிலை (3) முதுகலை நிலை ஆகிய மூன்றின் பாடத் திட்டங்களுக்குப் பொருத்தமான நூல்கள் தேவை. குறிப்பிட்ட தேதிக்குள் அவற்றின் கையேட்டுப் பிரதிகள், இன்னாருக்கு வந்து சேரவேண்டும். = வல்லுநர் குழுக்கள் அவற்றை மதிப்பிடும். ஒவ்வொரு மட்டத்திற்கும் முதற்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு அளிக்கப்படும். - o புகுமுக நூலுக்கு முதற் பரிசு மூவாயிரம் ரூபாய்கள். (அய்ம்பதுகளின் மதிப்புள்ள ரூபாய்கள்); இளங்கலை நூலுக்கு முதற்பரிசு அய்யாயிரம் ரூபாய்கள் முதுகலை நூலுக்கு முதற் பரிசு பத்தாயிரம் ரூபாய்கள். இரண்டாம் பரிசுக்கு முறையே இரண்டாயிரம் ரூபாய்கள், மூவாயிரம் ரூபாய்கள், அய்யாயிரம் ரூபாய்கள் அளிக்கப்படும். மூன்றாம் பரிசுத் தொகையும் அதற்கு ஏற்பக் குறிக்கப்பட்டது. பரிசுகள் எதற்கும் தகுதியில்லாவிடினும், ‘ந்ல்ல முயற்சி’ என்Ј)/ வல்லுநர் குழு பரிந்துரைக்கும் நூல்களுக்கு முறையே அய்நூறு, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்கள் ஆறுதல் பணமாக அளிக்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/365&oldid=788160" இலிருந்து மீள்விக்கப்பட்டது