உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நினைவு அலைகள் தேர்தல் வேலை செய்யலாமா?” - இப்படிப் பலர் வந்து, கல்வி அமைச்சரிடம் புகார் செய்தனர். "அண்ணன் மகன் என்கிற பாசம் இருக்காதா? டாக்டர் முதலியார் இடத்தில் பிறர் இருந்தாலும் அப்படித்தான் செய்திருக்கக்கூடும்” என்று இரண்டொருவரிடம் அமைச்சர் சமாதானம் கூறியதைக் கேட்க எனக்கு வாய்த்தது. தூது சென்றேன் - இருப்பினும் ஒரு நாள், கல்வி அமைச்சர், "நீங்கள் அரசு சார்பில் துரது செல்லுங்கள். கோவை ஜி. ஆர். தாமோதரனைத் தனியாகக் கண்டு, பேசுங்கள். "அவர், சென்னைப் பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்தராக வேண்டுமென்பது, எங்கள் விருப்பம். "அவர் ஒப்புக்கொண்டால், மற்றதைப் பார்த்துக்கொள்ள அரசு இருக்கிறது” என்று கட்டளையிட்டார். அப்படியே சென்றேன். இரண்டு முறை ஜி. ஆர். தாமோதரனைக் கண்டு பேசினேன். முதலில் அந்தப் பேச்சை எடுத்ததுமே, “அரசின் நல்லெண்ணத்திற்கு நன்றி. எதற்கும் ஒரு வயது வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராவதற்கு, நான் இளையவன். இப்போது, பற்றிக்கொள்ள முயல்வது முறையல்ல” என்று பதில் கூறினார். "யோசித்துப் பாருங்கள்; வலிய வருவதை மறுக்கணுமா?” என்றேன். ப.ெ மணிகளுக்குப் பின்னும் அதையே உறுதிப்படுத்தினார். என் துரது வெற்றி பெறவில்லை. ஆனால், எங்களிடையிலான நட்பு தழைத்தபடியே இருந்தது. இச் செய்தி பற்றி நான் எவரிடமும் பேச்சு மூச்சு விடவில்லை. நூற்றாண்டு விழா சென்னைப் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா 1957ஆம் ஆண்டு அக்டோபரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ் விழாவில், இந் நாட்டு, பிறநாட்டு அறிஞர்கள் சிலருக்கு 'டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது. டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அதற்குள், பன்னிரண்டு ஆண்டுகள் துணைவேந்தராக விளங்கினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/367&oldid=788162" இலிருந்து மீள்விக்கப்பட்டது