பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 1956 3.31 மேலும், உலகப் புகழ்பெற்ற, பிள்ளைப்பேறு மருத்துவமேதை: ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகக் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவர். எனவே, அவருக்கும் 'டாக்டர்’ பட்டம் வழங்க முயன்றோம். அவர் ஒப்பவில்லை அவர் அண்ணார் டாக்டர் ஆ. இராமசாமி முதலியாருக்கு மட்டும் 'டாக்டர்’ பட்டம் வழங்குவதற்கு இசைந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சென்னை மாநில தற்காலிக o ஆளுநராக விளங்கிய டாக்டர் இராஜமன்னாரின் கட்டாயத்தால் சென்னைப் பல்கலைக் கழகத்தின் கெளரவப் பட்டத்தை டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் ஏற்றுக்கொண்டார். நினைத்ததை முடிக்கும் நிலையிலேயே, அவரது பதவிக் காலத்தின் பெரும்பகுதி ஒளிவிட்டது. தமது பதவியைக் கொண்டு எந்தச் சொந்த நன்மையும் தேடிக் கொண்டதாக எவரும் இலட்சுமணசாமி முதலியாரைக் குறை கூற முடியாது. * -- எனக்கு முன்னர், அத்தகைய நேர்மையாளர் ஒருவர் துணை வேந்தராக இருந்து, எனக்குப் பதின்மூன்று ஆண்டுகள் வழிகாட்டியது எனக்குப் பெருந் துணையாயிற்று. அவரிடம் இருமுறை பாராட்டைப் பெறும் பெரும்பேறு கிட்டியது. . o இந்தியாவில், 1857இல் மூன்று பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. - == அவை சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக் கழகங்களாகும். எனவே, மூன்றும் ஒரே காலகட்டத்தில் நூற்றாண்டு விழா கொண்டாட நேர்ந்தது. அப் பெருவிழாவினை நினைவுகூரும் வகையில் ஏதாவது ஒன்று செய்ய விரும்புவதாகவும், அதற்காகப் பத்து இலட்சம் ரூபாய்கள் சிறப்புக் கொடையாக அளிக்குமாறும் மூன்று பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் இந்திய அரசின் நிதி அமைச்சர், மாண்புமிகு சி. டி. தேஷ்முக்கிற்கு எழுதினார்கள். முன் எடுத்துக்காட்டு இல்லை என்பதால் சிறப்புக் கொடை மறுக்கப்பட்டது. அத் துணைவேந்தர்கள் மூவரும் கூட்டாகச் சென்று, பிரதமர் நேருவை, நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/368&oldid=788163" இலிருந்து மீள்விக்கப்பட்டது