பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 - நினைவு அலைகள் பிரதமர் வசதிப்படி, மூன்றிலும் கலந்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். பிரதமர் நேரு மகிழ்ச்சியோடு இசைந்தார். - “இந்திய அரசின் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஏதாவது தனி நிதிக் கொடை கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று துணைவேந்தர்கள். கூறினார்கள். “ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் ஒரு கோடி ரூபாய் சிறப்புக் கொடை தருகிறேன் புதிய துறைகளைத் தொடங்குங்கள்” என்றார். துணைவேந்தர்கள் பரவசமாயினர். நன்றி கூறினார்கள். அப்போதே, அதுபற்றி, பிரதமர் நேரு, குறிப்பு எழுதி அனுப்பிவிட்டார். வாக்குறுதிப்படி ஒவ்வொரு பல்கலைக் கழகமும் ஒரு கோடி பெற்றது. = சென்னையில் சில புதிய துறைகள் தொடங்கப்பட்டன. நூற்றாண்டு விழாக் கட்டடம் கட்டப்பட்டது. இரண்டும் தேவை. இச் செலவுகளுக்கு ஒதுக்கிய பிறகும் நாற்பது இலட்சம் ரூபாய்கள் அளவுக்குப் பணம் மிஞ்சியது. ... " - அதைக் கொண்டு, சேப்பாக்கம் வளாகத்தில் 'ஆடிடோரியம்’ கட்டி இருக்கிறோம். இதைச் செய்திருக்க வேண்டியது இல்லை. ஆண்டில் பத்துப் பதினைந்து நாள்களுக்கு மட்டும் பயன்படும். ஒர் அரங்கத்தை நாற்பது இலட்சம் செலவில் கட்டவேண்டா மென்று, அவ்வேளை பல்கலைக்கழக மான்யக்குழுத்தலைவராக வந்துவிட்ட திரு. சி. டி தேஷ்முக் எழுதினார். நேரில் வந்து ஆட்சிக் குழுவோடு வாதாடினார். “பல்கலைக் கழகத்தின் தன்னாட்சி உரிமையில் தலையிட விடமாட்டோம்” என்று அடம்பிடித்து, அதைக் கட்டி முடித்து விட்டோம். இந்தியாவில் எங்குமில்லாத அளவு பெரியது என்னும் பெருமை உடையதே!. --- ஆனால் பராமரிப்புச் செலவு பல இலட்சங்கள் ஆயிற்றே! பிற் காலத்தில் பலருடைய அவாவினைத் துாண்டிப் பகையை வளர்க்கப் பயன்படப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/369&oldid=788164" இலிருந்து மீள்விக்கப்பட்டது