உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 37. காமராசர் விசாரணை தியாகி அழகிரிசாமி அழுதார். தொடக்கப் பள்ளிகளில், மக்கள் முயற்சியாலேயே பகல் உணவுத் திட்டத்தைப் பரப்புவதில் பல மாவட்டத் தலைவர்கள் ஒத்துழைப்புத் தந்தார்கள். திருநெல்வேலியில் திரு. கு. இராமசுப்பு ரெட்டியாரும், இராமநாதபுரம் மாவட்டத்தில் சாத்துார் இராமசாமி நாயுடுவும் முன்னின்று பரப்பினார்கள். கோவில்பட்டி வட்டத்தில், குறுக்குச் சாலை அழகிரிசாமி என்ற விடுதலைப் போராட்ட வீரர், தியாகியும் கர்ந்தியவாதியுமான ஒருவர் வாழ்ந்தார். பகல் உணவுத் தொடக்க நிகழ்ச்சிகள் பலவற்றில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். என்னோடு என் மனைவியும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், திரு. அழகிரிசாமி உரையாற்றினார். ஒரு முறை அழுதுவிட்டார். “மகாத்மா காந்தி, பெரிய வழக்கறிஞராக இருந்தும் நமக்குத் தொண்டு புரியும் பொருட்டு, குடியானவர்போல் மாறிவிட்டார். “எங்கோ, விசிறி அடியில் இருக்க வேண்டிய பொதுக்கல்வி இயக்குநர், நமக்கு உழைக்கும் பொருட்டு எளிய உடையில் ஊர் ஊராக அலைகிறார். “மகாத்மாவுக்குக் கஸ்துரிபாய் அம்மையார். போன்று, இயக்குநருக்குக் காந்தம்மா துணை நிற்கிறார்” என்று சொல்லுவார். அன்னை கஸ்துாரிபாயின் நினைவு அவருக்கு அழுகையை வரவழைத்து விட்டது. இரண்டு முறை அப்படிக் கண்ட பிறகு, i. “எங்களை மகாத்மாவோடும் கஸ்துாரிபாயோடும் ஒப்பிடுவது நல்லதல்ல! அது எங்கள் பேரில் பலருடைய அழுக்காற்றை மடை மாற்றிவிடுவதோடு, உங்களையும் அழவைக்கிறது. அதை விட்டு விடுங்கள்” என்று சொல்லிப் பார்த்தேன். பலிக்கவில்லை. என் பேச்சில் பிணைத்துக் கொண்டேன் ஒரு நாள் தியாகியின் பேச்சு, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்த நாட்டுப் பற்றையும், நன்றி உணர்வையும் கொப்பளிக்க வைத்தது. அதுமுதல் என் பேச்சில் பின்வரும் பகுதி சேர்ந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/370&oldid=788166" இலிருந்து மீள்விக்கப்பட்டது