உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் விசாரணை 337 “இக் கூட்டத்தில் நான் பேசினால், அதைச் சொல்லி உங்களைப் பாராட்டவேண்டும். அப்படிப் பாராட்டுவது, பல இடங்களில் அழுக்காறு அலைகளை எழுப்பும். உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் என்பதால், என் பெயரைப் போட வேண்டாமென்று சொன்னேன்” என்று விளக்கினார். தலைவர்கள் என்னை இமையெனக் காத்த பாங்கினை எண்ணி எண்ணிப் பரவசம் அடைகிறேன். காஞ்சிபுரம் நிகழ்ச்சிக்குப்பின், பகல் உணவு தொடங்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் அறிஞர் அண்ணாவின் மாதாந்திர நன்கொடையைச் சொல்லி, கட்சிக் கண்னோட்டம் இன்றி அனைவரும் இந்தப் பகல் உணவுத் திட்டத்தை ஆதரிக்கவேண்டும் என்று சொல்லி வந்தேன். ஒருமுறை, கல்வி அமைச்சர். சி. சுப்பிரமணியம் கலந்து கொண்ட திருநெல்வேலி நிகழ்ச்சியில் அண்ணாவின் நன்கொடையைச் சுட்டிக்காட்டினேன். எனக்குப் பின்னர், அம்மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பேசினார். அவர், தமது உரையில், “நெ. து. சு. எதிர்கட்சிச் சார்புடையவர்; அதனால், இவ் விழாவில் அண்ணாவிற்கு விளம்பரம் கொடுக்கிறார். அரசின் செல்வாக்கை இத்தகைய விளம்பரம் சற்று குறைக்காதா?’ என்று காரசாரமாகப் பேசினார். அடுத்துப் பேசிய கல்வி அமைச்சர் அதற்குப் பதில் கூறினார். “நெ. து.க. வோ, நானோ, வேறு எவரோ விளம்பரப்படுத்தித் தான், மக்களுக்கு அறிமுகமாக வேண்டிய நிலையில் அண்ணாதுரை இல்லை என்பது இவருக்குத் தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. -- “நெ. து. சு. வை, நான் மாணவப்பருவம் முதல் தொடர்ந்து அறிவேன். அவர் நடுநிலைமை தவறாதவர்” என்று பதில் அளித்தார். அதற்கு முன்னரே எதிர்ப்பட்ட புகார் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். காமராசரின் விசாரணை 1957ஆம் ஆண்டு மே திங்கள் இறுதியில் ஒருநாள், நான் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/374&oldid=788170" இலிருந்து மீள்விக்கப்பட்டது