பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 நினைவு அலைகள் தேன். என்னுடைய நேரடித் தொலைபேசி ஒலித்தது; தொடர்பு கொண்டேன். - கிங் நான் காமராஜ் பேசுகிறேன். நீங்கள் இன்று காலை, கோட்டைக்கு வந்து என்னைக் காணுங்கள்” என்றார். அவரைக் கேட்டுப் பேட்டி நேரத்தைக் குறித்துக் கொண்டேன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டேன். முதலமைச்சர் அறைக்குள் அழைத்துப் போகப்பட்டேன். அவர் சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமர்ந்ததும். முதலமைச்சர் என்னைப் பார்த்து, பழைய விதியும் புதிய விதியும் “புதிய உயர்நிலைப் பள்ளிகளைப் பழைய விதி முறைப்படி கொடுக்கப் போகிறீர்களா? புதிய அளவுகோலைக் கொண்டு பார்க்கப் போகிறீர்களா?” என்று அமைதியாகக் கேட்டார். "பழைய விதிமுறைப்படிதான், உயர்நிலைப் பள்ளிகளைக் கொடுப்பதோ, மறுப்பதோ” என்றேன். பல்ழய விதிமுறைகளைச் சுருக்கமாக விளக்கினேன். "ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலைப் பள்ளிக்கு இடையூறாக இருக்கக்கூடாது. “புதிய உயர்நிலைப் பள்ளிக்கூடம் கேட்கும் ஊரிலிருந்தும் அக்கம்பக்கத்தில் இருந்தும் முப்பது மாணாக்கராவது சேரும் வாய்ப்பு வேண்டும். "அப்படிப்ப்ட்ட நிலையிருந்து, பொதுமக்கள் நன் கொடையால் அய்ந்து ஏக்கர் நிலமும் ஒவ்வோர் வகுப்பிலும் ஒரு பிரிவுக்காகிலும் போதுமான கட்டடமும் கட்டித்தர வேண்டும். “தலைமையாசிரியர் அறை, அலுவலக அறை, ஆசிரியர்கள் அறை, நூலக அறை ஆகியவற்றையும் பொதுமக்கள் இடமிருந்து எதிர்பார்ப்பது பழைய முறை” என்று சுருக்கமாகக் கூறினேன். “இதிலிருந்து ஏதா வது. விதிவிலக்கு கொடுத்து இருக் கிறீர்களா?” என்று முதலமைச்சர் கேட்டார். “இல்லை அய்யா'என்றேன். "இப்போது நான் சொல்லப்போகிறது பற்றி வருத்தட் படாதீர்கள். அது பொய்யாகவும் இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/375&oldid=788171" இலிருந்து மீள்விக்கப்பட்டது