பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் விசாரணை 339 “தருமபுரி அருகில், லலிகம் என்று ஒர் ஊர் இருக்கிறது. அவ் வூரில், சென்ற ஆண்டு, முதல் மூன்று பாரங்கள் கொண்ட நடுநிலைப் பள்ளி கொடுத்தீர்களாம். “தேவையான கட்டடம் முழுவதும் கட்டி முடித்தால், அடுத்த ஆண்டில் அதை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற ஒப்புதல் கிடைக்கும் என்று, அந்த ஆணையிலேயே சொன்னிர்களாம். “அதன்படி, புதிய கட்டடம் கட்டி முடித்துவிட்டார்கள். அந்தக் கட்டடத் திறப்பு விழாவிற்கு என்னை அழைக்கும் பொருட்டுச் சென்னைக்கு வந்த, அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், உயர்நிலைப் பள்ளி மறுக்கப்பட்டதாகக் கேள்விப் பட்டாராம். - “என்னிடம் வந்து, தங்களுக்குப் பரிந்துரைக்கும்படி வேண்டிக் கொண்டார்” என்றார். "அப்போது, தருமபுரி மாவட்டம் சேலத்தோடு இணைந்திருந்தது. - -- “சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. சங்கரன் பிள்ளை எனக்கு அனுப்பிய அறிக்கையின்படி, கட்டடம் கட்டி முடிய வில்லை; விரைவில் முடியாது. அக் காரணத்தால், உயர்நிலைப் பள்ளிக்கு இசைவு தரவேண்டாம் என்பது அவருடைய பரிந்துரை. “எனவே, லலிகம் பள்ளி, நடுநிலைப் பள்ளியாக இருக்க முடிவு செய்யப்பட்டது” என்றேன். விதிவிலக்கு கொடுத்தீரா? “கட்டடம் முடியாத வேறு எந்த ஊருக்காவது உயர்நிலைப் பள்ளி கொடுத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். “இல்லை அய்யா” என்றேன். முதலமைச்சரின் முகத்தில் சிறிதும் கடுகடுப்பு இல்லை, தொடக்கம் முதல் புன்முறுவல் தவழ்ந்தது. "நீதிபதி கைலாசம் ஊரான பாலப்பட்டிக்குக் கட்டடம் முடியாத நிலையிலேயே, உயர்நிலைப் பள்ளி கொடுத்து இருக்கிறீர்களா?” என்பது முதல்வரின் கேள்வி. “உயர்நிலைப் பள்ளி கொடுத்திருக்கிறேன். கட்டடம் முடிந்து விட்டது என்பது எனது நினைவு. அக் கட்டடப் புகைப்படங்கள் - = # ཧཱ། ། --- - கோப்பில் இருப்பதாக நினைவு” என்று கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/376&oldid=788172" இலிருந்து மீள்விக்கப்பட்டது