பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 நினைவு அலைகள் இவ் வுரையாடலுக்கு இடையில் என் மூளை ஆக்கபூர்வமாக வேலை செய்தது. 'அய்யா! லலிகம் பள்ளிக் கட்டடம் முடியவில்லை என்று சனவரியில் அறிக்கை வந்தது. “இப்போது, நான்கு திங்கள் சென்று விட்டன. இந்த நான்கு திங்களில் வேலை முடிந்திருக்கலாம். “இன்றைய நிலவரத்தைத் தெரிந்துகொண்டு, நாளை தங்களைக் கண்டு, ஆணை பெற்றுக்கொள்கிறேன் அய்யா” என்றேன். “மாவட்டக் கல்வி அலுவலர், எந்தப் பக்கம் போயிருக்கிறாரோ! அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்வோமென்று சொல்லி விடுகிறேன்” என்றார். “தயவுசெய்து நாளைவரை பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டினேன். பொறுத்து இருக்க முதல்வர் இசைந்தார். எனது அலுவலகம் திரும்பியதும் தருமபுரி அஞ்சலகம் வழியாக அச் சரகப் பள்ளி ஆய்வாளரோடு தொலைபேசித் தொடர்பு கொண்டேன். விரிவான குறிப்புகள் தந்தேன். o எனது ஆணைக்கேற்ப, ஆய்வாளர், உடனே லலிகம் சென்றார். புதிய கட்டடத்தைப் பார்த்தார். கட்டடக் குழுவினரைக் கண்டார். நிலைமை என்ன? “சுவர்கள் நான்கு அடி மட்டத்திற்கு உயர்ந்துள்ளன. இரண்டு திங்களாகத் தவக்கம். “நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். போதிய நிதி கிடைத்ததும் கள்ளிக்கோட்டைக்கு ஆள் அனுப்பி சீமை ஒடு வாங்கப் போகிறார்கள். “எவ்வளவு துரிதப்படுத்தினாலும் ஆறு திங்களாவது பிடிக்கும்.” இது புதிய அறிக்கையின் சாரம். அடுத்த நாள், அந்த அறிக்கையை, முதலமைச்சர் காமராசரிடம் காட்டினேன். படித்துவிட்டுச் சிரித்தார். உண்மையை உணர்த்தினேன் பாலப்பட்டிக் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளிக்காகப் புதிதாகக் கட்டியுள்ள் கட்டடங்களின் புகைப்படங்களைக் காட்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/377&oldid=788173" இலிருந்து மீள்விக்கப்பட்டது