உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&БТLoГГпёғгr &Yol&ғТГТ&Toёттит 341 முதலமைச்சருக்கு நிறைவு ஏற்படவும், “எவ்வளவு பெரிய பொய்ப் புகார் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டுதான், நாங்களும் கட்சி நடத்த வேண்டியிருக்கிறது. அந்தச் சட்டமன்ற உறுப்பினரே, உங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பார்” என்றார் முதல்வர். "அது எதற்குங்க” என்றேன். நடந்தது என்ன? அவர் சொன்னது முழுமையும் உங்களுக்குத் தெரிந்திருப்பது நல்லது. “இவ்வாண்டு, புதிதாகத் திறக்கும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு வரம்புகட்டி விட்டார்கள். அதை எல்லா மாவட்டங்களுக்கும் பங்கு போட்டுத் தரவேண்டும். "அதே நேரத்தில், தேர்தல் காலத்தில் நாங்கள், தாராளமாக உயர்நிலைப் பள்ளிகள் வாங்கித் தருவதாக வாக்கு அளித்து விட்டோம். - _ “அரசு சொல்லியிருப்பதற்குமேல், கோரிக்கைகள் வந்துள்ளன. “எனவே, இயக்குநர் எங்கள் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில், ஒர் உபாயத்தைக் கடைப்பிடித்தார். “வெள்ளாள கவுண்டர் ஊர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துவிட்டு, வன்னிய கவுண்டர் ஊர்களுக்க இழுத்துப் பிடித்துவிட்டார் என்றார். “நான் சிரித்து விட்டேன். “இந்த இயக்குநர் சாதி கெட்டவர் சாதிப் பார்வை இல்லாதவராயிற்றே" என்று குறுக்கிட்டேன். “மெய்தான்! அவரைப் பொறுத்தமட்டில் அது சரி. அனால் கன் அமைச்சர், வெள்ளாளக் கவுண்டர் ஆயிற்றே. “அவரை மகிழ்விப்பதற்காக, அப்படிச் செய்திருக்கலாம்: அல்லது அமைச்சரே சாடை காட்டியிருக்கலாம் என்றார் சட்டமன்ற உறுப்பினர். “வழி விலகிப்போய் எவரையும் மகிழ்விக்க முயலமாட்டார், இயக்குநர். “அமைச்சர், சுப்பிரமணியமும் சாதி அடிப்படையில் ஆணையிட்டிருக்க மாட்டார் என்று சொன்னேன். அவர் விழித்தார்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/378&oldid=788174" இலிருந்து மீள்விக்கப்பட்டது