பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 நினைவு அலைகள் இப்படிச் சொல்லிய முதலமைச்சர் மேலும், “ஒரே ஒரு பள்ளிக்கூடத்தை வைத்து, சாதி அணி உருவாக்கப் பார்த்தார். “இப்போது அந்தக் குட்டு வெளியாகிவிட்டது. அவரே வந்து மன்னிப்புக் கேட்பார்” என்றார். “மன்னிப்பு கேட்கத் தேவையில்லை அய்யா! இப்போதும் ஒரு திங்களில் கட்டடத்தை முடித்துவிட்டால் நான்காம் பாரம் இவ் வாண்டே கொடுத்து விடுகிறேன் அய்யா!” என்றேன். பெரிய புன்முறுவலைக் கண்டேன். விடைபெற்றுக் கொண்டேன். சட்டமன்ற உறுப்பினர் வருத்தம் தெரிவித்தார் மறுநாள், லலிகம் முனுசாமி கவுண்டர், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முனுசாமி கவுண்டரை அழைத்துக் கொண்டு என் அலுவலகம் வந்தார். வழக்கம்போல், எழுந்து, கைகுலுக்கி வரவேற்றேன். தருமபுரியார், ஏற்கெனவே முதலமைச்சர் என்னிடம் கூறியதை எல்லாம் கூறினார். "நாங்கள் பொது வாழ்க்கையில் சிக்கிக் கொண்டவர்கள்; எடுத்த காரியத்தை முடிக்க எதை எதையோ சில வேளைகளில் செய்து விடுவோம். “உங்கள் மனம் புண்பட வேண்டாம். உங்கள் மனம் நொந்தால், கல்வி வளர்ச்சி குன்றிப் போகம். இகை மன்னிக்க மmங்கவிடுங்கள்” என்றார். “என் மனம் துய்மையானது. ஆகவே புண்ணாகாது! இப்பவும் சொல்லுகிறேன், முடிந்தால், ஊருக்குப் ப்ோய்க் கட்டடத்தை முடித்துவிட்டுத் தகவல் கொடுங்கள். இவ் வாண்டே, மேல் வகுப்புத் தருகிறேன்” என்றேன். இரு தரப்பிலும், கசப்பு உலர்ந்து விட்டது. அடுத்த ஆண்டு லலிகத்தில் உயர்நிலைப் பள்ளி கிடைத்தது. இந் நிகழ்ச்சி, என் கண்களைத் திறந்தது. சொந்த அற்ப நிராசைகளை மிகைப்படுத்தி, சாதிப் பிரிவுகளை பகையாளி களாகவே வைத்து இருப்பவர்கள், நமது பொது வாழ்க்கை முன்னணியினரே என்பது புலனாயிற்று. இதற்கு நச்சு முறிவு மருந்து, எப்போது கிடைக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/379&oldid=788175" இலிருந்து மீள்விக்கப்பட்டது