பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 38. கல்வி இயக்ககம் மக்கள் இயக்கமாகியது ஆதாரக் கல்விப் பள்ளிகளின் அவலங்கள் செங்கற்பட்டு மாவட்டத்தில், திருவள்ளுர் வட்டத்தில் கடம்பத்துார் சர்கம் என்று ஒன்று உண்டு. அதில் எழுபத்து ஏழு தொடக்கப் பள்ளிகள் இருந்தன. அத்தனையும் ஆதாரக் கல்வி முறையில் செயல்பட்டன. அவற்றில் சில உயர் ஆதாரப் பள்ளிகளாக இருந்தன. மக்கள் இயக்கமாகவே தொடங்கிய் பகல் உணவுத்திட்டம் அரசுத் திட்டமானதும் இச் சரகத்தின் எல்லாப் பள்ளிகளுக்கும் பரவி விட்டது. அந் நிறைவு விழாவைப் பல பள்ளிகள் கொண்டாடின ஒரு நாள் முழுவதும் என்னை வேலை வாங்கினார்கள். நிர்வாகக் கோளாறு அச் சுற்றுப் பயணத்தில் கண்டது என்ன? கரும்பலகைகள் பல வெளுத்து இருந்தன. ஆசிரியர்கள் அத்துணை அளவுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது விளங்கிற்று. "சாயம் பூசக்கூடாதா?’ என்றேன். பெரிய கோப்புகளைக் காட்டினார்கள். கரும்பலகைகளுக்குக் கறுப்புச் சாயம் பூசுவது பற்றிய கடிதப் போக்குவரத்துகளின் தொகுப்புகள் அக் கோப்புகள். ஒரு கரும்பலகைக்குச் சாயம் பூச ஒருவர் அனுமதி கோரினார். பள்ளிக்கூடம் மட்டும் அந்தக் கடிதங்களுக்காக ஆறு ரூபாய் செலவு செய்தது. மாவட்ட ஆடசக குழுவன அலுவலகம் ஏறத்தாழ அவ்வளவு செலவு செய்து இருக்கும். ஒரு கரும்பலகைக்குச் சாயம்பூச எவ்வளவு செலவாகுமென்று வின் வினேன். மூன்று ரூபாய்க்குமேல் ஆகாது’ என்ற பதில் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/380&oldid=788177" இலிருந்து மீள்விக்கப்பட்டது