பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 நினைவு அலைகள் o 'அந்த மூன்று ரூபாயை நன்கொடையாகக் கொடுக்கக்கூடிய ஊரார் எவரும் இல்லையா? என்றேன். அங்குக் கூடியிருந்தவர்களில் இரண்டொருவர், தாங்கள் கொடுப்பதாக முன் வந்தார்கள். பள்ளிச் சுவர்கள் அனைத்தும் கறுத்து இருந்தன; வெள்ளையடித்து ஆண்டுகள் பலவாயின என்பது புலனாயிற்று. 'வரப்போகிற பொங்கலில், உங்கள் வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடிப்பீர்கள். அப்போது, பள்ளிச் சுவர்களுக்கும் வெள்ளையடித்து விடுங்கள். 'முடிந்தால் ஒருவராக, முடியாவிட்டால் கூட்டாக அச் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றேன். கேட்டுக் கொண்டார்கள். பள்ளிக் கட்டடங்களில் பாதி பழுதானவை அல்லது போதாதவை. புதிய சிந்தனை அந் நிலை என் சிந்தனையை முடுக்கிற்று. ஒரு வகுப்பறை கட்ட மூவாயிரம் அல்லது மூவாயிரத்து அய்ந்நூறு ரூபாய்களுக்குமேல் செலவாகாது. வசதி படைத்தவர்கள், தங்கள் முன்னோர் பெயரிலோ, தங்கள் பெயரிலோ, ஒரு வகுப்பறையோ சில அறைகள் கொண்ட கட்டடமோ கட்டித் தரலாம் என்று யோசனை கூறினேன். உலக உருண்டை பாடங்களுக்கான துணைக் கருவிகள் இருந்த பள்ளிகள் சில. ஆசிரியர்கள் உட்கார நாற்காலிகள் பற்றாக்குறை; மாணாக்கர் உட்காரப் பலகைகள் இல்லாமை. பல பள்ளிகளில் கழிவறைகள் இல்லாமை; இப்படிக் குறைகள், பலவற்றைக் கண்டேன். துப்புரவை வளர்த்தல், ஆதாரக் கல்வியில் முக்கிய இடம் பெறும். கழிவறைகள் இல்லாது, தண்ணிர் இல்லாது, துப்புரவை 'வளர்ப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம். கடம்பத்துார் பகுதியில் மட்டுமா இக் குறைகள்? இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/381&oldid=788178" இலிருந்து மீள்விக்கப்பட்டது