பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி இயக்ககம் மக்கள் இயக்கமாகியது 345 மாநிலம் முழுவதும் இக் குறைகள் பரவிக் கிடந்தன. இந்திய நாடு முழுவதிலும் இத்தகைய பற்றாக் குறைகளும் குறைபாடுகளும் பரவி இருந்தன. இன்றும் அவை போக்கப் படவில்லை. கல்வி மேம்பாடு என்ற பெயரில் கலை யரங்கங்கள், திறந்த வெளி அரங்கங்கள் ஒரு பக்கம் வரிப் பணத்தில் இருந்து கட்டப்பட்டன. - இப் பகட்டுகளுக்குக் கிடைத்த பணம், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளைக் கொடுப்பதற்கு எட்டுவதே இல்லை. எனவே, மேம்பாடு, பகட்டுக்கும் கணக்கு சொல்வதற்கும் பயன்படுகிறதே யொழிய, பொது மக்கள் பிள்ளைகளை முன்னேற்றப் பயன்படவில்லை. இன்றும் கழிவறைகள் இல்லாத அல்லது போதாத கல்வி நிலையங்கள் ஏராளம். இந்திய நாடு முழுவதையும் எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு அறுபதற்கு மேற்பட்ட கல்வி நிலையக் கட்டடங்கள் தகுதியற்றவை. கடம்பத்துார் பகுதியினர், எனது யோசனைகளை எதிர்க்கவில்லை. ‘முடியுமா?’ என்றும் மறுக்க முடியவில்லை.

  • ஒருநாள் நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துக்கொண்டு, நான் சென்னைக்குப் புறப்படும்போது,

“நீங்கள் சொன்னவற்றைச் செய்ய முயல்கிறோம். எவ்வளவு முடியுமென்று இப்போது சொல்வதற்கு இல்லை” என்று கூறி, என்னை வழியனுப்பி வைத்தார்கள். மக்களைத் தயார் செய்தோம் அப்போது செங்கற்பட்டு மாவட்டக் கல்வி அலுவலராக இருந்தவர், திரு.ஜே. ஏ.இராயன்.அவரும் என்னோடு காரில் வந்தார். “மக்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். உள்ளூர்ப் பொதுக் காரியங்கள் பலவற்றை அவர்களே முடித்துவிடும் சமுதாய உணர்வைத் துரண்டி விட வேண்டும். “எங்கள் இந்துக் கோவில்கள் பல்லாயிரக் கணக்கானவை. அவற்றில் ஒழுங்காகப் பூசைகளும் பண்டிகை விழாக்களும் நடக்கின்றன. m

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/382&oldid=788179" இலிருந்து மீள்விக்கப்பட்டது