பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி இயக்ககம் மக்கள் இயக்கமாகியது 347 வாங்கி உதவிய பொருள்களின் மதிப்பும் செப்பனிட்ட செலவும் பதின்மூன்று ஆயிரம் ரூபாய்கள் ஆயின. இத்தகைய முயற்சியையும் மக்கள் நன்கொடைகளையும் அலுவலர்கள் அதுவரை கண்டது இல்லை. எனவே திகைத்தார்கள். பல பள்ளிகளுக்கும் கிடைத்த நன்கொடைப் பொருள்களில், எளிதாகக் கொண்டுவரக் கூடியவற்றை, கடம்பத்துாருக்குக் கொண்டு வந்து கண்காட்சியில் வைப்பதென்றும், அதையொட்டிப் பொது மக்கள் மாநாடு கூட்டிக் கல்விக்கு மேலும் ஆதரவு தேடுவது என்றும் முடிவு செய்தோம். - கல்வி அமைச்சரையோ, முதலமைச்சரையோ அழைக்கு மளவிற்குப் பெரும் செயல் அல்ல என்று கல்வி அலுவலரும் மக்கள் பிரதிநிதிகளும் கருதினார்கள். தொடக்கத்தில் நன்கொடை சிறியனவாகவே இருந்தன. மாநாடு நாள் நெருங்க நெருங்க, நன்கொடைப் பொருள்கள் தாராளமாக வந்தன. அத்தனையும் பள்ளிக்கூடங்களுக்குத் தேவையானவை. மாநாடு 20-2-1958 அன்று கடம்பத்துாரில் முதல் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடைபெற்றது. அத் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினராக விளங்கிய திரு. ஏகாம்பர முதலியாரும் பிற மக்கள் தலைவர்களும் ஏற்பாடுகளை நல்ல வண்ணம் செய்திருந்தார்கள். “கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பொது மக்களின் அக்கறையும் ஆதரவும் ஈடுபாடும் அடிப்படையாகும். “அவர்களது உணர்வுகள் ஆசிரியர்களிடையே அத்தகைய உணர்வுகளைத் துரண்டிவிடும். மாணாக்கரின் நாட்டத்தையும் ஈடுபாட்டையும் பெருக்கும். "அப்போது கல்வி செழிக்கும்; தரம் உயரும் தன்னம்பிக்கை வளரும். “புத்தகப் பூச்சிகளாக இருக்கும் மக்கள், பொறுப்பேற்கும் முன்னவர்களாகத் தங்களை அறியாமலேயே மாறி விடுவார்கள்.” இந்தப் பாணியில் நான் உரையாற்றிக் கொண்டு போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/384&oldid=788181" இலிருந்து மீள்விக்கப்பட்டது