பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34B நினைவு அலைகள் அவ் வேளை எதிர்பாராத இரு அன்னியர்கள், ஜீப்பில் வந்து இறங்கினார்கள். விருந்தாளிகளை வரவேற்கும்படி குறிப்புக் காட்டினேன் ஆய்வாளர் சென்று வரவேற்று வந்தார். இருவரில் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டோம் அமைச்சர் பக்தவத்சலனாரின் மூத்த மகளாகிய திருமதி சரோஜின வரதப்பனை அனைவருமே அடையாளங் கண்டு கொண்டனர். அவர் தம்முடன் வந்த அம்மையாரை அறிமுகப்படுத்தினார். செல்வி சென்குப்தா “வந்திருக்கும் விருந்தாளி, இந்திய அரசின் சமூகநலத் துறையின் இயக்குநர் இவர் பெயர் செல்வி சென்குப்தா "இப் பகுதியில் நடக்கும் மாதர் நலப்பணிகளைப் பார்க்க வந்தவர். இக் கூட்டத்தைக் கண்டதும் இங்கு வந்து கலந்து கொள்ள ஆசைப்பட்டார். எனவே, அழைத்து வந்துள்ளேன்,” என்று கூறி அவையோர்க்கு அறிமுகம் செய்து வைத்தார். இதற்கிடையில் ‘மாநாட்டின் நோக்கம், அதன் விளைவாகக் காட்சியில் உள்ள பொருள்கள், மக்களிடம் இருந்து நன்கொடை யாகக் கிடைத்தன என்பவற்றைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். செல்வி சென்குப்தா பெருமகிழ்ச்சி கொண்டார். "மக்கள் முன்னேற்றத்தில், மக்கள் ஈடுபாடு எளிதாக இருக்க வேண்டும். இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டுகிறேன். "இதைத் தொடர்ந்து நடத்தி நம் கல்வி நிலையங்களைச் சீரமையுங்கள்” என்று ஊக்க உரையாற்றினார். எதிர்பாராத இப் பாராட்டு, ஆசிரிய சமுதாயத்தைப் பரவசப் படுத்தியது. செல்வி சென்குப்தா, தில்லிக்குத் திரும்பியதும் கடம்பத்துரில் கண்ட முன்னோடி முயற்சி பற்றி, குறிப்பு ஒன்றை ஆயத்தம் செய்து கல்வி அமைச்சகத்திற்கும் அனுப்பி வைத்தார். பிரதமர் பாராட்டிய பகல் உணவுத் திட்டம் பகல் உணவுத் திட்டத்தை இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் சேர்த்ததும், அதற்காகப் போராடி அதைத் திட்டத்திலிருந்து நீக்காதபடி பார்த்துக் கொண்டதும் மட்டுமே கல்வி அமைச்சகத்திற்கு அதிகார பூர்வமாகத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/385&oldid=788182" இலிருந்து மீள்விக்கப்பட்டது