உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி இயக்ககம் மக்கள் இயக்கமாகியது. , 349 பகல் உணவுத் திட்டம், மக்கள் திட்டமாகப் பல ஊர்களில் நடப்பதையும் அப்போதைய இந்திய அரசின் கூடுதல் கல்வி ஆலோசகர், திரு. சையதீன் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்து வைத்து இருந்தார். சென்னை அரசு, அதுபற்றி, எவ்விதத் தகவலும் தில்லிக்கு அனுப்பவில்லை. பகல் உணவுத் திட்டம் இந்த நிலையில், திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள காந்தி கிராமக் கல்வி நிலையங்களின் பத்தாவது ஆண்டு விழாவிற்குப் பிரதமர் நேரு வந்து கலந்து கொண்டார். இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சையதின் அவ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். பிந்தியவர், பிரதமர் வந்த விமானத்தில் வந்தார். வானத்தில் பறந்துகொண்டிருக்கையில், சையதீன் பிரதமரிடம் மக்கள் உதவியைக் கொண்டு பகல் உணவுத் திட்டத்தை நடத்தி வருவது பற்றிக் கூறி வந்தார். அதைக் கேட்டுப் பிரதமர் பூரித்துப் போனார். மதுரை விமான நிலையத்தில் பிரதமர் இறங்கினார். முதலமைச்சர் காமராசரும் கல்வி அமைச்சர் சுப்பிரமணியமும் பிரதமரை வரவேற்றனர். அவர்களைக் கண்டதும், 'ஒரு பெரிய நல்ல நடவடிக்கையை எனக்குக்கூட சொல்லாமல் உங்கள் மாநிலத்தில் இரகசியமாக நடத்தி வருவதாகத் திரு. சையதீன் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது - பகல் உணவுத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்” என்றார் பிரதமர். அடுத்த நாள், அமைச்சர் எனக்கு ஆணையிட்டார். அதன்படி, மக்கள் நடத்தி வரும் பகல் உணவுத் திட்டம் பற்றி விரிவான குறிப்பை எழுதி, அமைச்சரிடம் காட்டினேன். அதை முதல் அமைச்சரிடம் காட்டினார். அக் குறிப்பு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவள்ளுர் கடம்பத்துாரில் நடந்த முதல் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டின் வெற்றி, அடுத்துள்ள திருவள்ளுர் சரக மக்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/386&oldid=788183" இலிருந்து மீள்விக்கப்பட்டது