பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 நினைவு அலைகள் அங்கும் மாநாடு நடத்த முடிவு எடுத்தார்கள். பள்ளிச் சீரமைப்புக் குழு அமைத்தார்கள். ஆங்காங்கே இருந்த பள்ளிகளின் குறைகளைக் களையும் பொருட்டுப் பொது மக்களை வேண்டிக் கொண்டார்கள். முயற்சி வீண் போகவில்லை. 24-3-1958 அன்று திருவள்ளுரில் இரண்டாவது பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடந்தது. இருபத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்பு உள்ள பொருள்கள் கிடைத்தன. இருப்பினும் இம் மாநாட்டையும் குடும்ப விவகாரமாகவே நடத்தினோம். அமைச்சர்களைக் கூப்பிடத் தயங்கினேன். திருவள்ளுரில் என்னைக் கொண்டு மாநாட்டை நடத்தினார்கள். கடம்பத்துளர் ம்ாநாடு பற்றி, செய்தியாளர்களுக்கும் முன் அறிவிப்புக் கொடுக்கவில்லை. ஆனால், திருவள்ளூரில் முன்னறிவிப்புக் கொடுத்தோம். அதன் வெற்றி கல்வித்துறைக்கு நம்பிக்கையூட்டியது: தெம்பூட்டியது. திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கி. வெங்கட சுப்பிரமணியத்திற்கு இதுபற்றிக் கடிதம் எழுதினேன். முயற்சி எடுத்துக் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தைத் சேர்ந்த வள்ளியூர், திசையன் விளை ஆகிய இரு சரகங்களும் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்தும் முயற்சியில் இறங்கின. s ஆசிரியர்கள் ஆர்வத்தோடு செயல் பட்டனர்; நிர்வாகிகள் முழுமனத்துடன் ஒத்துழைப்புத் தந்தார்கள் பொது மக்கள் வள்ளல்களாக மாறினார்கள். முதலமைச்சரையும் கல்வி அமைச்சரையும் அழைக்குமளவிற்குப் பெரித்ாக இருக்குமென்று எங்களுக்குப் புலப்பட்டது. 25ーアー7955 அன்று நடந்த வள்ளியூர் மாநாட்டில் கல்வி அமைச்சரும்.28-7-1958 அன்று நடந்த திசையன்விளை மாநாட்டில் முதலமைச்சரும் கலந்து கொள்ள இசைந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/387&oldid=788184" இலிருந்து மீள்விக்கப்பட்டது